சமீபகாலமாக நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தில் மார்பிங் செய்து வெளியாகிறது. இதனால் பல நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை வரை சென்றுள்ளனர். இப்படி இருக்கையில் தற்போது பிரபல சீரியல் நடிகையின் புகைப்படம் மார்பிங் செய்து இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இந்த தொடரில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா இந்த தொடரில் இருந்து விலகியதால் இப்போது ரியா நடித்து வருகிறார். இதில் சந்தியாவின் மாமியார் சிவகாமியாக நடித்து வருபவர் நடிகை பிரவீனா.
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு அங்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் சின்னதிரையில் களம் இறங்கினார். அதிலும் குறிப்பாக ராஜா ராணி 2 தொடரில் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிரவீனாவின் புகைப்படம் மார்பிங் செய்து வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீனா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாக்யராஜ் என்ற 22 வயது மாணவனை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இப்போது பிரவீனாவின் மகளின் புகைப்படமும் இதே போன்ற மார்பிங் செய்து வெளியாகி உள்ளதால் அவரது குடும்பம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் மீண்டும் பிரவீனா போலீசில் சென்று இது குறித்து புகார் கொடுத்துள்ளார். ஆகையால் மீண்டும் அந்த பாக்யராஜ் என்ற நபரை போலீசார் செய்துள்ளனர்.
இந்த விஷயம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பிரபலங்கள் தங்களது புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இதை சில வக்கரம் பிடித்த நபர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு பணம் சம்பாதிப்பது கேவலமான விஷயம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.