Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், இன்டர்வியூக்கு ஆசை ஆசையாக போன நிலாவால் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியாமல் போய்விட்டது. இதனால் விரக்தியான நிலா, வீட்டிற்கு வந்து பல்லவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது எதற்காக இந்த வீட்டிற்கு யாரும் வர மாட்டாங்க, உனக்கு பிரண்ட்ஸ் என்று யாரும் கிடையாதா, எதற்கு இந்த வீட்டில் எந்த பெண்ணும் தங்க மாட்டாங்க என்று ஒரு பெயர் இருக்கிறது என கேள்வி கேட்கிறார். அப்பொழுது பல்லவன் எங்க அம்மா இறந்து போய் விட்டார். அதற்கு காரணம் என்னுடைய அப்பாதான் கொலை பண்ணதாக ஒரு பேச்சு.
அதனால் எங்க அப்பா கொஞ்ச நாளைக்கு ஜெயிலில் இருந்தார், பிறகு ஜெயிலில் இருந்து வந்தவர் இரண்டாவது கல்யாணம் பண்ணினார். அவங்களும் வீட்டை விட்டு போன நிலையில் இந்த வீடு ராசி இல்லாத வீடு என்று ஊரில் ஒரு பெயர் வாங்கி விட்டது. அதனால் தான் யாரும் எங்க வீட்டுக்கு வர மாட்டாங்க என்று ஃபீல் பண்ணி சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த சேரனை பார்த்த நிலா இன்டர்வியூ கேன்சல் ஆகிவிட்டது. மறுபடியும் இன்டர்வியூ இருந்தால் சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்சவரிடமும் கேட்டு வைங்க எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணுங்க என கெஞ்சுகிறார். இதனை பார்த்த சேரன், நிலாவை கூட்டிட்டு சேரன் வேலை பார்க்கும் இடத்திற்கு போகிறார்.
அங்கே போனதும் நான் ஒரு சாதாரண மேஸ்திரி படிப்பறிவு இல்லை, நீங்க நினைக்கிற மாதிரி இன்ஜினியரிங் இல்லை என்ற உண்மையை சொல்லி விடுகிறார். உடனே அங்கிருந்து கிளம்பிய நிலா, சோழனை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது எதற்காக பொய் சொன்னாய் என்று கேட்கும் பொழுது சோழன் நிலவை எப்படியோ சமாளித்து பேசி விடுகிறார்.
பிறகு வீட்டில் எல்லோரும் நிலா வரவில்லை என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் இனி மறுபடியும் பொண்ணுங்க இல்லாத வீடாக மாறிவிடுமோ, அண்ணி வர மாட்டாங்களா என்ற பயத்தில் பல்லவன் ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் சோழன், சேரன் உண்மையே சொன்னதற்காக கோபப்பட்டு நிலவை தேடி பிடிப்பதற்காக வெளியே போய் விட்டார்.
அப்படி போன பொழுது நிலா ஒரு கோவிலில் இருப்பதை பார்த்த சோழன், நிலாவிடம் பேசுகிறார். உடனே இன்டர்வியூ பொய்யா என்று நிலா கேட்ட பொழுது அது உண்மைதான் என்று சோழன் அவருடைய நண்பருக்கு போன் பண்ணி ஸ்பீக்கரில் பேசுகிறார்.
அப்படி பேசும்பொழுது சோழனின் நண்பர், இது இன்டர்வியூ கிடையாது, நீதானே சும்மா ஒரு நாலு கேள்வியை மட்டும் கேட்டு அனுப்பி வை என்று சொன்னாய். நானும் உனக்காக சரி என்று சொன்னேன். திடீரென்று எங்க அப்பா வந்து விட்டாங்க. எங்க அப்பாக்கு உன்ன பார்த்தாலே பிடிக்காது அதனால்தான் இன்னைக்கு அந்த ட்ராமா வேண்டாம் என்று உன்னை போக சொன்னேன் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
இதையெல்லாம் கேட்டா நிலா, வாயை திறந்தாலே பொய்தான். இன்னும் என்னெல்லாம் என்னிடம் பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய் என்று சோழனிடம் சண்டை போடுகிறார். ஆனாலும் சோழன் எப்படியாவது நிலாவை சமாளித்து வீட்டுக்கு கூட்டிட்டு போய்விடுவார்.