டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலிக்கும் புதுசாக வந்த சீரியல்.. 5வது இடத்திற்கு போன பேவரிட் சீரியல்

Serial Trp Rating: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக வருகின்ற சீரியல்கள் ஒவ்வொன்றும் மக்களை கவர்ந்து வருகிறது. அதிலும் சில சீரியல்களின் கதைகள் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 13 சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் சில சீரியல்கள் தான் டாப்பில் இருக்கிறது.

அப்படி எந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமாக புள்ளிகளை பெற்று முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. எந்த சீரியல்கள் கம்மியான புள்ளிகளை பெற்று இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இந்த வாரம் 5.83 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எப்பொழுதுமே இந்த சீரியல் தான் ஜீ தமிழில் முதல் இடத்தை பிடித்து வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கின் மாஸ் நடிப்பு, கார்த்திக்கு இருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வருவதால் தான். அடுத்ததாக 4.69 புள்ளிகளைப் பெற்று சந்தியாராகம் சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து புதுசாக வந்த அயலி சீரியல் 4.48 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் ஜொலிக்கிறது. அடுத்து வீரா சீரியல் 4.36 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், மக்களின் பேவரைட் சீரியலாக இருந்த அண்ணா சீரியல் இந்த வாரம் 4.30 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது.

அடுத்ததாக நினைத்தாலே இனிக்கும் 2.51 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும், கெட்டி மேளம் சீரியல் 2.41 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திலும், 1.64 புள்ளிகளை பெற்று இதயம் சீரியல் எட்டாவது இடத்திலும், 1.51 புள்ளிகளை பெற்று மனசெல்லாம் சீரியல் ஒன்பதாவது இடத்திலும், 1.48 பிள்ளைகளைப் பெற்று பத்தாவது இடத்தில் மௌனம் பேசியதே சீரியல் இருக்கிறது.