ஒரே நேரத்தில் இரண்டு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் கதாநாயகன்.. புதுசாக கிடைத்த வாய்ப்பு

New Serial: அடுக்கடுக்காக புதுப்புது சீரியல்கள் வந்து கொண்டே இருக்கிறது, அதனால் எந்த சேனலில் என்ன சீரியல்கள் நல்லா இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத அளவிற்கு மக்களுக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் சன் டிவி சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்த்து வருகிறார்கள்.

அப்பொழுது அதில் விளம்பரம் போடும் பொழுது மற்ற சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்த்து விடுவார்கள். அதில் ஏதாவது சீரியல் நன்றாக இருந்தால் அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் தற்போது புதுசாக நுழைந்திருக்கும் ஆடுகளம் சீரியல் மக்களை கவர்ந்திருக்கிறது. இதில் ராஜசேகர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மானுல் என்பவர் விஜய் டிவியில் மௌன ராகம் 2 என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

அதில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சன் டிவியில் ஆடுகளம் என்ற சீரியலில் கமிட்டானார். இந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இவருக்கு புதுசாக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதுவும் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் வரப்போகும் திருமாங்கல்யம் என்ற சீரியலில் வரப்போகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஆகா கல்யாணம் என்ற சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காமிட் ஆகியிருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சல்மானுல்க்கு கிடைத்திருக்கிறது.