நிலா மனசை மாற்றிய பல்லவன்.. சேரனுக்கு நடக்கப் போகும் கல்யாணம்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா சோழன் கல்யாணம் பொய் கல்யாணம் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்த நிலையில் அனைவரும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர்களை தேற்றும் விதமாக சேரன் சமாதானப்படுத்துகிறார். அத்துடன் அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் செண்டிமெண்டையும் பார்த்து நிலா கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டிலேயே இருப்பதற்கு தயாராகி விட்டார்.

பிறகு மறுநாள் பல்லவன் அழுது கொண்டிருக்கும் பொழுது நிலா பேசப் போகிறார். அப்பொழுது பல்லவன் பாண்டியன் இருவரும் சேர்ந்து நிலா மனசை மாற்றும் அளவிற்கு பாசத்தை காட்டுகிறார்கள். அத்துடன் பல்லவன் நீங்கள் சோழன் அண்ணாவை வேணா விவாகரத்து பண்ணிக்கோங்க. ஆனா எனக்கு அண்ணியாக இந்த வீட்டிலே இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்கிறார்.

இதை பார்த்த சேரனும், உங்க வீட்டில் இருந்து என்னெல்லாம் பண்ணனும் நினைச்சியோ அதெல்லாம் இங்கே இருந்து பண்ணுமா. நாங்க எல்லோரும் உனக்கு சப்போர்ட்டாக இருப்போம், வெளியே வாடகை எடுத்து தங்குவதற்கு பதிலாக இங்கேயே இருந்து எல்லா ஆசையும் நிறைவேற்று என சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட நிலா உடனே நான் இந்த வீட்டை விட்டும் உங்களை விட்டும் எங்கேயும் போக மாட்டேன்.

இங்கே இருந்து விடுகிறேன் என்று சொல்கிறார், இதை கேட்டதும் பல்லவன் உண்மைக்கும் தானே என்று கேட்ட பொழுது நிலா சத்தியம் பண்ணி ஆமாம் என சொல்லி விடுகிறார். பிறகு அனைவரும் சந்தோஷமான நிலையில் நிலா மனசு நோகும்படி எதுவும் நடக்க கூடாது என்று ஒவ்வொருவரும் புரிந்து கொண்டார்கள்.

அடுத்ததாக நிலா, முதலில் சேரன் அண்ணனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் அதற்கான வேலைகளை பார்ப்போம் என சொல்கிறார். அந்த வகையில் அனைவரும் சேர்ந்து சேரனிடம் உங்களுக்கு எந்த மாதிரியான பொண்ணு வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்பொழுது சேரன் மனதில் இருக்கும் ஆசை அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்கிறார்.

இப்படி அந்த ஒட்டு மொத்த குடும்பமே சந்தோஷமாக மாறிவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் நிலா அங்கு இருப்பது தான். இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சோழன் மனசையும் புரிந்து கொண்டு நிலா சோழனுடன் சேர்ந்து விடுவார்.