அரசி செய்த வினையால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்.. மீனாவை காப்பாற்ற வரும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி நடன போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற்று விட்டார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் ராஜியை பாராட்டிய நிலையில் கோமதிக்கும் ராஜி ஆடுவது பிடித்து போய்விட்டது. ஆனாலும் அங்கே இருக்கும் சில பசங்கள், ராஜிடம் வம்பு இழுக்கிறார்கள்.

பிறகு மீனா அதற்கு பதிலடி கொடுக்கும் நிலையில் கோமதி எந்த பிரச்சினையும் பண்ண வேண்டாம் என்று சொல்லி அவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்படி கூட்டிட்டு வரும் பொழுது வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ராஜி நல்ல ஆடியதற்கு பாராட்டி ராஜியுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த சமயத்தில் குமரவேலு வாசலில் நின்று அரசி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அரசிக்கு சதீஷ் மெசேஜ் பண்ணியதை கேட்டுக்கொண்டே அரசி முதலில் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார். சதிஷ் நான் பேசியதற்கு நீ எதுவும் பதில் சொல்லவில்லையே என்று கேட்டுக் பொழுது அரசிக்கும் சதிசை பிடித்து போய் விட்டதால் சிரித்துக் கொண்டு தனியாக அந்த மெசேஜை கேட்டுக் கொள்கிறார்.

அந்த சமயத்தில் குமரவேலு அரசியின் ரூமுக்குள் நுழைந்து பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் அரசி, உன்னை கல்யாணம் பண்ணினால் என்னுடைய குடும்பமும் உங்க குடும்பமும் சேர்ந்து விடும் என்பதற்காக தான் உங்களை கல்யாணம் பண்ணனும் என்று எனக்கு எண்ணம் வந்தது. ஆனால் உங்களை கல்யாணம் பண்ணினால் எங்க அப்பா அம்மா என்ன நிலைமைக்கு ஆளாவாங்க என்பது நன்றாக புரிந்து விட்டது.

அதனால் இனி உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது, என் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அரசி சொல்லி விடுகிறார். இதனால் கோபப்பட்ட குமரவேலு, இப்ப கூட நான் உன்னை கூட்டிட்டு போய் என்ன வேணாலும் பண்ணலாம் யாரும் எதுவும் பண்ண முடியாது என்று மிரட்டிய நிலையில் அங்கு இருந்து வந்த கோமதி அரசி ரூம்குள் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கதவை திறந்து உள்ளே போகிறார்.

அப்பொழுது குமரவேலு, கோமதியை தள்ளிவிட்டு அரசிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிக்கிறார். உடனே பயந்து போன கோமதி, மீனா ராஜியை கூப்பிட்ட நிலையில் அவர்களும் வந்து குமரவேலிடமிருந்து அரசியே காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் குமரவேலு தள்ளிவிட்ட நிலையில் மீனாவுக்கு வேற வழியில்லாததால் அங்கு இருந்த தோசை கல்லை எடுத்து குமரவேலு தலையில் அடித்து விடுகிறார்.

பிறகு குமரவேலு மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதே பார்த்த ராஜி, அங்கே இருப்பவர்களிடம் குமரவேலு இறந்து விட்டதாக சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகி பயத்தில் இருக்கிறார்கள். ஒரே அடி அடித்ததில் குமரவேலு கதையை மீனா க்ளோஸ் பண்ணி விட்டார். ஆனாலும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு கதிர் வந்து தான் உதவி பண்ண போகிறார்.

ஏனென்றால் ராஜி, கதிருக்கு போன் பண்ணி இறுதி சுற்றில் கலந்து கொள்ளும்போது நீங்க வரவேண்டும் என்று கூப்பிட்டார். அதற்காக கதிர் வந்ததும் குமரவேலு பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டு அவர்தான் இதிலிருந்து மற்றவர்களை காப்பாற்றுவார். ஆனாலும் குற்ற உணர்ச்சியில் பாண்டியன் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் அவஸ்தைப்பட போகிறார்கள்.