Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சர்டிபிகேட் வாங்குவதற்காக நிலா திருவண்ணாமலைக்கு கிளம்பிவிட்டார். ஆனால் நிலா தனியாக போவது சரியாக இருக்காது என்று முடிவு பண்ணிய சோழன் எப்படியாவது கூடப் போக வேண்டும் என்று நினைத்தார். கடைசி வரை நிலா நான் தனியாகத்தான் போயிட்டு வருவேன். யாரும் என்னுடன் வரக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
அதனால் சோழனுக்கு வேற வழி இல்லாமல் நிலாவை தனியாக அனுப்பி வைத்தார். ஆனாலும் பஸ்ஸில் போக வேண்டாம் என்று காரை வரவைத்து அதில் நிலாவை அனுப்பி வைத்தார். அப்படி நிலா, திருவண்ணாமலைக்கு காரில் போகும்பொழுது இடையில் காரை நிப்பாட்டி நடேசன் நான் உன் கூட துணைக்கு வருகிறேன் என்று ஏறிவிட்டார்.
நிலாவால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை என்பதால் நடேசன் உடன் திருவண்ணாமலை காலேஜுக்கு போய் சேர்ந்து விட்டார். அங்கே போனதும் நிலாவின் தோழி வந்து சர்டிபிகேட் வாங்குவதற்கு விசாரித்து வைத்ததாக சொல்லி நிலாவை காலேஜுக்குள் கூட்டிட்டு போகிறார். அப்படி போகும் பொழுது நடேசன், நீ தைரியமா போ எதாவது பிரச்சனை என்றால் என்னை கூப்பிடு என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு நிலா காலேஜுக்குள் சென்று ஆபீஸில் விசாரிக்கிறார். அங்கு உள்ளவர்களிடம் என்னுடைய சர்டிபிகேட் தொலைந்து போய்விட்டது மறுபடியும் வேண்டும் என்று கேட்கிறார். உடனே நிலா காலேஜுக்கு வந்து சர்டிபிகேட் வாங்க வந்திருக்கிறார் என்ற விஷயத்தை அங்கு இருப்பவர் ஒருவர் நிலாவின் அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார்.
அதற்கு நிலாவின் அண்ணன் நான் கிளம்பி வருகிறேன் என்று சொல்லி காலேஜுக்கு வந்து விடுகிறார். அதற்குள் நிலா விவரங்கள் எல்லாத்தையும் ஆபீசில் வாங்கிவிட்டு கிளம்புவதற்கு தயாராகி விட்டார். அப்படி கிளம்பும்போது நிலாவின் அண்ணன் வந்து பிரச்சினை பண்ணி நிலா வாங்கிய எல்லா தகவலையும் கிழித்து விடுகிறார். அத்துடன் நிலாவுடன் பிரச்சனை பண்ணியதால் நடேசன் நிலாவைக் காப்பாற்றி காருக்குள் உட்கார வைக்கிறார்.
இதனால் கோபமடைந்த நிலாவின் அண்ணன், நடேசனை கத்தியால் குத்தி விடுகிறார். பார்க்கவே பாவமாக இருந்தது, நிலாவுக்கு சப்போர்ட்டாக வந்த சேரனின் அப்பா பரிதாபமான நிலையில் இருக்கிறார். ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராதபடி நிலா காப்பாற்றி விடுவார்.