எல்லா அப்பன் செஞ்ச பாவம் மகனுக்கு தானே வரும்.. உச்சகட்ட பரபரப்பில் அதிரடி காட்டும் பாக்கியலட்சுமி

Bhakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பாக்யாவின் வாழ்க்கை தான் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில் அவரது மகன்களின் வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்கும் படியாக இருக்கிறது. முதலில் செழியன் தன்னுடன் பணியாற்றி வரும் மாலினி உடன் நெருங்கி பழகி வந்தார்.

ஒரு கட்டத்தில் மாலினி இப்போது செழியனை மிரட்டி வருகிறார். இதனால் தலையாட்டி பொம்மை போல் மாலினியின் பேச்சுக்கு செழியன் செவி சாய்த்து வருகிறார். இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிந்த நிலையில் மாலினிக்கு முடிவு கட்டுவதற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். அடுத்ததாக எழிலின் வாழ்க்கையும் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் சென்னை வந்துள்ள நிலையில் பாக்யா அவரை சந்திக்கிறார். தன்னுடைய மனைவி அமிர்தா தனக்கு வேண்டும் என்று பாக்யாவிடம் கணேஷ் வாதாடி கொண்டிருக்கிறார். ஆனால் அமிர்தாவின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்படி பாக்யா தன்னால் முடிந்தவரை கணேஷிடம் பேசி சம்மதம் வாங்க முற்படுகிறார்.

ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல கணேஷ் தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறார். இப்போது எழிலின் வாழ்க்கைக்கு கெடு விதிக்கும் வகையில் பாக்யா அதிரடியாக ஒரு வாக்கு கொடுத்து விடுகிறார். அதாவது அமிர்தாவிடம் தானே பேசுவதாகவும் ஆனால் ஒரு மாதம் தன் வீட்டு பக்கம் கணேஷ் வரக்கூடாது என எச்சரிக்கிறார்.

இதற்கு கணேஷ் சம்மதம் தெரிவித்த நிலையில் பாக்யா அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் எழில் அமிர்தாவுக்கு வாழ்க்கை கெடுக்க வேண்டும் என்பதால் தான் கணவனை இழந்தாலும் அவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு நல்ல மனசு உடைய எழிலுக்கு இவ்வாறு நடந்தேறி உள்ளது.

ஆகையால் பாக்யா இப்போது செழியன் மற்றும் எழிலின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே அவரது தொழிலில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் குடைச்சல் கொடுப்பதற்காக ராதிகா அவர் வீட்டுக்கே வந்து விட்டார். இவ்வாறு பாக்யாவுக்கு மட்டும் பிரச்சனை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →