Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சீரியல் நடிகை ரவீனா மிகவும் பரிச்சயமானார். இதில் இவருடைய நடிப்பு திறமையை ஒட்டி டான்ஸிலும் அதிக ஆர்வம் இருந்ததால் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்களையும் போட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் கிடைத்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.
அதிலும் நான் இப்படித்தான் என்பதற்கு ஏற்ப எதையுமே கண்டுகொள்ளாமல் டேக் இட் ஈஸியாக எல்லா விஷயத்தையும் எடுத்துக்கொண்டு டான்ஸர் மணியுடன் ஜால்ரா அடித்து வந்தார். இதனால் பாதிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு ரவீனா வெளியேறி விட்டார். அதன் பிறகு மறுபடியும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் விஜய் டிவியில் சிந்து பைரவி என்ற சீரியல் மூலம் பைரவி கேரக்டரில் ப்ரோமோ வெளியானது. ஆனால் வெளியான கொஞ்ச நாளிலேயே இவருடைய கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒருவர் கமிட்டாகி விட்டார். அந்த சீரியல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் இந்த சீரியலில் பைரவி கேரக்டரில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த ரவீனா சூட்டிங் எல்லாம் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இந்த கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை நான் விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதனால் கடுப்பான சிந்து பைரவி நாடகத்தின் தயாரிப்பாளர், சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பெயரில் தற்போது ரவீனாக்கு ரெட் கார்டு வழங்கும் விதமாக ஒரு வருடமாக எந்த சீரியலிலும், நிகழ்ச்சியிலும் நடிக்க முடியாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரவீனா என்னுடைய கதைக்கு முக்கியத்துவம் இல்லாததாகவும் இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் என்பதாலும் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் நான் விலகி விட்டேன் என்று காரணம் கூறுகிறார்.
ஆனாலும் கமிட் ஆகி ஷூட்டிங் நடந்த பிறகு இந்த முடிவை எடுத்ததற்கு தண்டனையாக ஓராண்டு தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. சேனல் தரப்பில் இருந்தும் இதை கண்டு கொள்ளாததால் ரவீனா தரப்பிலிருந்து அவருடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதுவது எழுதி மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் மேற்கொண்டு ஏதாவது அவருக்கு ஏத்த மாதிரி விஷயங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.