குடும்பத்துடன் சேர்ந்து குணசேகரனுக்கு வைக்கப் போகும் ஆப்பு.. ஜனனியின் தில்லாலங்கடி வேலை

எல்லா சேனல்களின் சீரியலை பின்னுக்கு தள்ளி அனைவரும் பேசக்கூடிய ஒரே நாடகம் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் மட்டும் தான். அதற்கு காரணம் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக கதையை கொண்டு போவது தான். தற்போது குணசேகரன் ஆட்டைய போட நினைக்கும் அப்பத்தாவின் 40% சொத்து மற்றும் கரிகாலன் அப்பாவின் கல்யாண மண்டபம். இது ரெண்டுக்கும் ஆசைப்பட்டு காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால் இன்னொரு பக்கம் குணசேகரன் நினைக்கிறது என்னைக்குமே நடக்காது நடக்கவும் விடமாட்டேன் என்று அவருக்கு தெரியாமலே அவர் ரூட்டிலேயே பிளான் பண்ணி வருகிறார். அதை தற்போது ஆதிரைக்கு சொல்லி உன் அண்ணன் சொல்றப்படி கேட்கிற மாதிரி நடித்துக் கொள். அவர்கிட்ட எல்லாம் இப்படி இருந்தா தான் நமக்கு தேவையான காரியத்தை சாதிக்க முடியும்.

அதனால் உங்க அண்ணன் என்ன சொன்னாலும் சரி சரி மட்டும் சொல்லிக்கிட்டு எல்லாத்துக்கும் முரண்டு பிடிக்காமல் இரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று ஜனனி சொல்லியிருக்கிறார். இது புரியாமல் குணசேகரன், தன்னுடைய தங்கை உண்மையிலேயே மாறிவிட்டார் நம்ம சொல்றதை கேட்க ஆரம்பித்து விட்டார் என்று கல்யாண வேலையை அவர் இஷ்டப்படி பார்த்துட்டு வரார்.

அடுத்ததாக ஜனனி வைத்திருக்கும் திட்டத்தை ரேணுகா, நந்தினி, குணசேகரனின் அம்மா எல்லாரிடமும் சொல்கிறார். அவர்களும் ஜனனி நீ என்ன பண்ணாலும் உனக்கு சப்போர்ட்டாக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அடுத்தபடியாக குணசேகரனுக்கு தெரியாமல் மற்றும் எஸ் கே ஆர் ஃபேமிலிக்கும் தெரியாமல் அருணை தனியாக கூப்பிட்டு ஜனனி அவரிடம் உனக்கு ஆதரையை நிஜமாக பிடித்திருக்கிறதா என்று கேட்கிறார்.

அதற்கு அருண் எப்போ அந்த குணசேகரன் எங்க குடும்பத்தை அவமானப்படுத்தினாரோ அப்பமே எனக்கு இந்த கல்யாணம் ஒத்து வராது என்று நான் முடிவு பண்ணிட்டேன். மேற்கொண்டு இதைப்பற்றி என்னிடம் எதுவும் பேசாதீர்கள் என்று சொல்கிறார். அதற்கு ஜனனி ஐந்து பக்கத்திற்கு டயலாக் பேசி அருணை ஒரு வழியாக இவர் பக்கம் இழுத்து விடுகிறார். பிறகு அருண், ஆதிரை தான் அவருடைய அண்ணன் என்ன செஞ்சாலும் எனக்கு ஓகே என்று சம்மதத்தை தெரிவித்து விட்டால் இனிமேல் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு ஜனனி அதெல்லாம் சும்மா ஒரு நாடகம் தான். நான் தான் அவளிடம் அப்படி சொல்ல சொன்னேன். அப்பதான் குணசேகரனை டைவர்ட் பண்ணி நம்ம நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் மற்றபடி ஆதிரை உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் உன்னோட தான் அவள் திருமணம் நடக்கும் இது என்னுடைய வாக்கு என்று கூறுகிறார். அத்துடன் இதுதான் அப்பத்தாவின் ஆசையும் கூட. மேலும் நான் குணசேகரனுக்கு கொடுக்கப்படும் பதிலடிதான் அவருக்கு பெரிய பாடமாக அமையப் போகுது என்று சொல்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →