குணசேகரனின் டார்ச்சரை அனுபவிக்கும் 4 மருமகள்களின் சம்பளம்.. ஜனனியை பின்னுக்கு தள்ளிய நக்கல் ராணி

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியல் கதை எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் இந்த நாடகத்தை பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை என்று மக்கள் சலிப்புடன் பார்த்து வருகிறார்கள். அதாவது விட்டுட்டு போகவும் முடியவில்லை, கூட வச்சுக்கவும் முடியலை என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

அது போல தான் எதிர்நீச்சல் சீரியலும், பார்க்காமலும் இருக்க முடியவில்லை பார்க்கவும் முடியவில்லை என்பதற்கு ஏற்ப தான் கதை நகர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த சீரியலில் குணசேகரன் கொடுக்கும் டார்ச்சரை நான்கு மருமகள்கள் அனுபவித்து எப்படியாவது சொந்தக்காலில் நின்னு ஜெயித்து காட்ட வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

தற்போது இந்த நான்கு மருமகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் விவரம் வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம். இதில் நக்கல் ராணியாகவும் கேலியும் கிண்டலும் பண்ணி நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நந்தினி வாங்கும் ஒரு நாள் சம்பளம் 18,000 ரூபாய். இருக்கிறதிலேயே இவங்க மட்டும் தான் அதிகமாக சம்பளத்தை பெறுகிறார்.

அதற்கு காரணம் சன் டிவியில் பிரியமானவளே என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் நந்தினி என்கிற ஹரிப்பிரியாவுக்கு சம்பளம் அதிகம். அடுத்ததாக வரலாறு, 5 ஸ்டார் மற்றும் ஆட்டோகிராப் படத்தின் மூலம் பிரபலமான கனிகா, டப்பிங் மற்றும் சில பாடல்களையும் பாடி இருக்கிறார்.

அந்த வகையில் சீரியல் மூலம் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நுழைந்தவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் ஈஸ்வரி என்கிற கனிகாவிற்கு ஒரு நாள் சம்பளம் 15000 ரூபாய். இவரை தொடர்ந்து பரதநாட்டியத்தில் மக்களை கவர்ந்து சீரியல் மூலம் பரிச்சயமான பிரியதர்ஷினி என்கிற ரேணுகாவிற்கு ஒரு நாள் சம்பளம் 14000 ரூபாய்.

மேலும் இதில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடித்து வரும் பார்வதிக்கு ஒரு நாளைக்கு 12,000 சம்பளம் வாங்குகிறார். இருப்பதிலேயே இவருக்கு தான் கம்மியான சம்பளம். இவர்களையெல்லாம் ஓவர் டேக் பண்ணும் விதமாக குணசேகரன் அதிக சம்பளத்தை வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →