எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

Ethirneechal Artist Salary : தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி மற்ற சேனல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து வருவது எதிர்நீச்சல் சீரியல் தான். அத்துடன் குடும்பத்துடன் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளத்தின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்த நாடகத்தில் ஹீரோயின் என்று தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லிட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கும் அனைவருமே இந்த நாடகத்தைப் பொறுத்தவரை ஹீரோயின்கள் தான். இருந்தாலும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்து விளங்கக்கூடியவர் ஜனனி.

இவர் தமிழில் நடித்த முதல் சீரியலிலே ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூபாய் 15,000 சம்பளம் வாங்குகிறார். அடுத்ததாக இவருக்கு ஜோடியாக நடித்து வரும் சக்தி ஹீரோ என்று சொல்லிட முடியாது. அதே நேரத்தில் மனைவிக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்து வரும் இவருடைய கதாபாத்திரத்திற்காக ரூபாய் 12000 சம்பளம் வாங்கி வருகிறார்.

இதனை அடுத்து படபடவென்று பேசி நக்கல் ராணியாக அனைவரது மனதிலும் குடி புகுந்த நந்தினி அவருடைய கதாபாத்திரத்திற்காக ஒரு எபிசோடுக்கு ரூபாய் 15,000 சம்பளம் பெற்று வருகிறார். அடுத்து மல்லுவேட்டி மைனராக தினமும் கலர் சட்டையை போட்டுக்கொண்டு பல பலவென்று மின்னிக் கொண்டு வரும் கதிர் உடைய சம்பளம் 12000 ரூபாய்.

முக்கால்வாசி அமைதியாகவே இருந்து கேப் கிடைக்கும் பொழுதெல்லாம் மனக்குறையை புலம்பித் தீர்த்து வரும் ஈஸ்வரி கதாபாத்திரத்திற்காக கன்னிகா சம்பளம் 12000 ரூபாய். இதற்கடுத்து பூமாதேவியாக இருந்து வந்த ரேணுகா மகளுக்காக பொங்கி எழுந்து வார்த்தைகளால் சுட்டெரித்துக் கொண்டு வரும் இவருடைய கதாபாத்திரத்துக்கு 10000 ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்.

அடுத்ததாக என்ன நடந்தாலும் மங்குனியாக இருந்து அண்ணனுக்கு பக்கப்பாட்டு பாடிவரும் ஞானத்தின் கதாபாத்திரத்திற்கு 15000 ரூபாய் வாங்கி வருகிறார். இதனை அடுத்து எதிலுமே என்ன நெருங்கவே முடியாது என்று காலரை தூக்கிவிட்டு கெத்தாக வரும் குணசேகரின் சம்பளம் ஒரு எபிசோடுக்கு 20,000 ரூபாய் வாங்கி வருகிறார். இப்படி இந்த நாடகத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் சம்பளம் மட்டுமே ஒரு எபிசோடு பல லட்சம் பட்ஜெட்டில் உருவாகி கொண்டு வருகிறது.