முத்துவின் கேரக்டரை டேமேஜ் பண்ணிய சிறகடிக்கும் ஆசை சீரியல்.. ரவி பற்றி விஜயாவிடம் சொன்ன நீத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய் சொல்லி பித்தலாட்டம் பண்ணி விஜயா வீட்டுக்கு மருமகளாக வந்த ரோகினி தொடர்ந்து செய்த தில்லாலங்கடி வேலை எப்பொழுது வெளிச்சத்துக்கு வரும்.

ரோகிணி எப்பொழுது மாட்டிக்கொள்ளுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று சொல்வதற்கு ஏற்ப இனி ரோகிணி மாட்டினா என்ன மாட்டவில்லை என்றால் என்ன, என்று சொல்வதற்கு ஏற்ப அழுத்து போய்விட்டது.

முக்கியமாக பணக்கார வீட்டு பொண்ணுன்னு கெத்தாக இருந்த ரோகினி இப்பொழுது உண்மை தெரிந்த பிறகும் அதே கெத்துடன் தான் அந்த வீட்டில் இருக்கிறார். வழக்கம் போல் மீனாதான் வேலைக்காரி போல் எல்லாருக்கும் பணிவிடை செய்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி தற்போது முத்துவின் கேரக்டர் டேமேஜ் செய்யும் அளவிற்கு சீரியலின் கதை நகர்ந்து கொண்டு வருகிறது.

அதாவது சீதாவின் காதல் அருண் மீது இருக்கிறது என்று தெரிந்த பிறகும் முத்து பிடிவாதமாக அருண் வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆனாலும் சீதாவிற்கும், மீனா, மீனாவின் அம்மா மற்றும் சத்திய அனைவருக்கும் அருண் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் இந்த முத்து ஆணாதிக்க திமிரை காட்டும் விதமாக வேண்டாம் என்று பிடிவாதமாக சொல்லி சீதா அருண் கல்யாணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

இது சம்பந்தமாக சத்தியா மற்றும் மீனாவின் அம்மா, முத்துவிடம் பேசினாலும் அதற்கு பிடி கொடுக்காமல் என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். இதுல வேற அவ்வப்போது மீனாவிடம் சண்டை போட்டு முத்து அராஜகம் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் விஜயா, நீத்து மற்றும் மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நீத்துவே சந்தித்து பேசுகிறார்.

அப்படி பேசும் பொழுது நீத்து, எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. அப்படியே கல்யாணம் பண்ண ஆசை வந்தால் ரவி மாதிரி ஒரு ஆள் இருந்தால்தான் எனக்கு பிடிக்கும். ரவி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது என்று ரவி புராணத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார். இதை கேட்டதும் கடுப்பான விஜயா வீட்டிற்கு வந்து ஸ்ருதியிடம் ரவி, இனி நீத்து ஹோட்டலுக்கு வேலைக்கு போக வேண்டாம்.

நீ சொன்னபடி அவனுக்கு தனியா ஒரு ஹோட்டலை வச்சு கொடு அவன் அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். உடனே ரவி ஏன் அம்மா இப்படி சொல்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். கடைசியில் சுருதி இதை காரணமாக வைத்து ரவியிடம் சீக்கிரம் அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்து நம்முடைய ஹோட்டலுக்கு வா என்று கரராக சொல்லி விடுகிறார். ஒரு காலத்தில் ரசித்துப் பார்த்து வந்த சீரியல் இப்படி மோசமாகிவிட்டதே என்று நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த சீரியலுக்கு வர ஆரம்பித்து விட்டது.