எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் போர் அடிக்குது போல் தெரிகிறது. அரைச்ச மாவையை அரைத்து எல்லாருமே அந்த 40% சொத்துக்காக தான் ஆசைப்படுவது போல் தெரிகிறது. இதற்கு எதிர்நீச்சல் என்று பெயர் வைப்பதற்கு பதிலாக 40% ஷேர் என்று பெயர் வைத்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆதிரை திருமணத்தை பகடைக்காயாக வைத்து அரசு, குணசேகரன் வீட்டிற்கு வந்து மெடிக்கல் கம்பெனியை கேட்டுப் போன பிறகு அப்பத்தா, ஜனனி, சக்தி, இவர்கள் அனைவரும் எஸ் கே ஆர் வீட்டிற்கு சென்று அவருடைய மனநிலை பற்றி தெரிந்து கொண்டு அவர் என்ன சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக போயிருக்கிறார்கள். ஏனென்றால் எஸ்கேஆர் எப்பொழுதுமே நேர்மையாகவும் மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படாதவராகவும் இருக்கக்கூடியவர்.
அதனால் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும் என்று எல்லா விஷயத்தையும் அப்பத்தா கூறுகிறார். அதற்கு முன்னாடி எஸ்கேஆர் இந்த கல்யாணத்தில் எனக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. அதே நேரத்தில் என் தம்பி காதலித்த ஒரே காரணத்திற்காக நான் இதில் தலையிடவும் இல்லை. ஆனால் கண்டிப்பாக குணசேகரன் தங்கையை இவன் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா எனக்கு தெரியாது என்று பட்டும் படாத மாதிரி பேசுகிறார்.
அடுத்ததாக அப்பத்தா, உங்க தம்பி அரசு வீட்டுக்கு வந்து ஒரு மெடிக்கல் கம்பெனியை வரதட்சணையாக கேட்கிறார். அத்துடன் அது கொடுத்தால் மட்டும்தான் திருமணத்தை மேற்கொண்டு பேசலாம் என்று உங்கள் தம்பி அருணும் சொல்லிட்டார் அது உங்களுக்கு தெரியுமா என்று அப்பத்தா கேட்கிறார். இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியாகிறார் எஸ் கே ஆர்.
ஆனால் இவர் இதை கேட்டு என்ன சொல்ல போகிறாய் வழக்கம்போல் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களுடைய முடிவில் நான் என்னுடைய கருத்தை திணிக்க மாட்டேன் என்று சொல்லப் போகிறார். அடுத்ததாக அப்பத்தா, ஜனனியிடம் குணசேகரன் மற்றும் அரசு ஆடப்போகிற கேமை விட என்னுடைய ஆட்டம் பெருசாக இருக்கும் என்று கூறுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த அப்பத்தா, குணசேகரனிடம் அவர்கள் கேட்கிறது என்னுடைய 40% ஷேர் தான் என்று கூறுகிறார். உடனே குணசேகரன் அவர்கள் கேட்டபடி அந்த ஷேர் அவங்க கிட்டையே குடுக்கலாம்னு நினைக்கிறாயா என்று கோபத்துடன் கேட்கிறார். அடுத்ததாக ஜனனி நான் கொஞ்சம் பேசலாமா என்று கேட்கிறார். ஆக மொத்தத்துல எல்லாருக்குமே அந்த 40% சொத்தில் தான் கண்ணாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.