மகாநதி சீரியலுக்கு வந்த சோதனை.. நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு பதிலடி கொடுத்த பாரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருக்கிறது. இதற்கு ஒரு விதத்தில் கதை காரணமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி பார்ப்பவர்களை கவர்ந்ததால் இந்த நாடகத்திற்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்கிறது.

முக்கியமாக காவிரியின் துணிச்சலான பேச்சும், சுட்டித்தனமான விஷயங்கள் எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் பழைய காவிரியை பார்க்க முடியவில்லை என்று மக்கள் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வந்தார்கள். சீரியலை பொருத்தவரை நடிப்பவர்கள் மீதுதான் நெகடிவ் கமெண்ட்ஸ்கள் வரும்.

ஆனால் மகாநதி சீரியலில் முதல்முறையாக கதையை எழுதும் எழுத்தாளர் பாரி மீது தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் காவிரியை டம்மியாக்கி எப்ப பார்த்தாலும் அப்பளம், வெண்ணிலா கதையை முடிவு பண்ணுங்க என்று சொல்லும் இரண்டு வசனத்தை மட்டும் கொடுத்துவிட்டு காவிரியை அடக்கி வைப்பதால் சீரியலை பார்ப்பவர்கள் எழுத்தாளர் பாரிக்கு எதிராக கமெண்ட்ஸ்கள் போடுகிறார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாரி கொடுத்த பதிலடி என்னவென்றால், இதுவரை நேருக்கு நேர் பேசி துணிச்சலாக இருந்த காவேரி எப்பொழுது ஒப்பந்தத்தின்படி கல்யாணம் நடந்திருக்கிறது என்ற விஷயம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டதோ அப்பொழுதே தான் பண்ணியது தவறு என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.

இப்படி குற்ற உணர்ச்சியால் இருக்கும் காவிரி, அம்மாவை சமாதானப்படுத்தி விஜய்யுடன் சேரனும் தான் ஆசைப்படுவாங்க. அப்படி இருக்கும் பொழுது அம்மாவை எதிர்த்து வாதாடி போகணும்னு நினைக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாமல் காவிரிக்கு தொடர்ந்து அந்த மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்தால் அது பார்ப்பவர்களுக்கும் போர் அடிக்கும் எனக்கும் அது ரிஜெக்ட் ஆகிவிடும்.

அதனால் எடுத்த உடனே படபடவென்று எந்த விஷயத்தையும் பண்ண முடியாது. அப்படி எல்லாம் பார்க்கணும் என்றால் அது படமாக தான் இருக்கும், சீரியலில் அது சாத்தியமாக இருக்காது. அதனால் ஒரு சீரியலை எப்படி கொண்டு போகணுமோ அப்படித்தான் நாங்கள் அதை எழுதி கொண்டு போவோம்.

பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு எதிர்பார்த்தபடி எல்லா விஷயமும் நடக்கும். மேலும் காவிரி அம்மாவுக்கு எந்த அளவுக்கு சப்போர்ட்டாக இருக்கிறாரோ, அதே மாதிரி விஜய்க்கும் சப்போர்ட்டாக நிற்பார் என்று பதில் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் அப்பள பிரச்சனை, வெண்ணிலாபிரச்சினை எல்லாமே முடிந்து விஜய் காவேரி ஒன்று சேர போகிறார்கள்.