Veera: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ஆர்ப்பாட்டம் பண்ணி மறுபடியும் ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் வந்து விட்டார். ஆனாலும் இந்த குடும்பத்தில் இருப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒற்றுமையாக இருக்கும் இவர்களைப் பிரித்து விட்டால் நாம் நினைத்தபடி எல்லாம் நடந்து விடும் என்று விஜி, அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதை கேட்ட வீரா, நீ நினைக்கிறது எதுவும் நடக்காது. நீதான் ஏமாந்து போகப் போகிறாய், என்னை மீறி உன்னால் எதையும் செய்ய முடியாது, முடிஞ்சா பார்க்கலாம் என்று சவால் விடுகிறார். இதனை அடுத்து வீராவின் அண்ணன் பாண்டியன் ஞாபகமாக ஆட்டோ சங்கத்தில் இருப்பவர்கள் வந்து பாண்டியன் பெயரை வைக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்.
இதைக் கேட்டதும் வீரா குடும்பத்தில் இருப்பவர்கள் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் மாறன், வீராவிடம் உங்க அண்ணன் பெயரில் சங்கம் ஆரம்பித்ததும் அதில் ரத்ததானம், அன்னதானம் போன்ற பல நல்ல விஷயங்களை செய்து உங்க அண்ணனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வீராவிடம் சொல்கிறார்.
இதை கேட்டதும் வீரா ரொம்பவே பில் பண்ணி மாறனை அன்பாக பார்க்கிறார். ஆனால் இதில் ஒரு உண்மை மறைந்திருக்கிறது அது எப்பொழுது வெளிவரும் என்பதன் கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது வீராவின் அண்ணன் இறந்ததற்கு காரணம் மாறன் ராகவன் இல்லை, விஜி தான். இந்த உண்மையையும் மாறன் வீரா கண்டுபிடித்து விஜிக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்.