ரத்னத்துக்கு மறுகல்யாணம் பண்ணி வைப்பதற்கு தயாரான அண்ணா.. சண்முகத்திற்கு தெரிய வந்த உண்மை

Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், இசக்கி தன் பேச்சைக் கேட்காமல் மாமியார் வீட்டுக்கு போனது சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. அம்மாவுக்கு தெவசம் பண்ணும் போது சரியான நேரத்தில் இசக்கி வராததால் இன்னும் சண்முகத்திற்கு இசக்கி மீது கோபம் அதிகமாக்கிவிட்டது. இதற்கெல்லாம் காரணமாக சூழ்ச்சி பணி கெடுத்தது சௌந்தர பாண்டி தான்.

அது எதுவும் புரியாமல் சண்முகம் முழு கோபத்தையும் இசக்கி மீது காட்டி வருகிறார். அப்பொழுது இசக்கிக்கு உடம்பு சரியில்லை என்று பரணி செக்கப் பண்ணுவதற்கு வீட்டிற்கு போகிறார். போன இடத்தில் பரணி அம்மா தலையில் கட்டி இருப்பதாலும் அவங்களை பக்கத்தில் இருந்து ஒருவர் அக்கறையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால்தான் இசக்கி வந்திருக்கிறார் என்ற விஷயம் பரணிக்கு தெரிந்து விட்டது.

இந்த விஷயத்தை பரணி சண்முகத்திடம் வந்து சொல்கிறார். சண்முகத்துக்கு இந்த உண்மை தெரிந்தவுடன் அத்தை மீது பாசத்தை காட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டு அத்தையுடன் பாசமாக பேச ஆரம்பித்து விட்டார். அத்துடன் இசக்கி செஞ்ச காரியத்துக்கு நான் தான் அவளைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டேன் என்று இசக்கியவும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்கப் போகிறார்.

அடுத்ததாக அறிவு எதார்த்தமாக செய்த விஷயத்தை ரத்னா தவறாக புரிந்து வீட்டில் வந்து சண்டை போடுகிறார். ரத்னா பேசுவதில் அறிவு மீது இருக்கும் பாசத்தினால் தான் இப்படி பண்ணுகிறார் என்று சண்முகம் மற்றும் பரணிக்கு புரிந்து விட்டது. அதனால் எப்படியாவது ரத்னாவிற்கு விவாகரத்து வாங்குன கையோடு அறிவிக்கும் ரத்னாவுக்கும் மறு கல்யாணத்தை பண்ணி வைத்து விட வேண்டும் என்று சண்முகம் முடிவு எடுத்து விட்டார்.