Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனை விட்டு தனியாக போகலாம் என்று முடிவு பண்ணிய நிலா சோழனைக் விவாகரத்து பண்ணுவதற்கு வக்கீலை பார்த்து பேசிட்டு வந்தார். அடுத்ததாக பல்லவனை கூட்டிட்டு கோயிலுக்குப் போன நிலாவை கார்த்திகா சந்தித்து பேசுகிறார்.
அந்த வகையில் சேரன் மீது கார்த்திகா வைத்திருக்கும் காதலும், குடும்பத்தால் பயந்து போய் இருக்கும் கார்த்திகா எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறார் என்பதையும் நிலா புரிந்து கொள்கிறார். ஆனாலும் கார்த்திகா வேற ஒருவருடன் கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதால் நிலா எதுவானாலும் நீங்கள் தான் சமாளிக்கணும் என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக பல்லவன் மற்றும் நிலா வீட்டில் விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது சேரன் தலைவலியுடன் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது நிலா, சேரனை கவனிக்கும் விதமாக தண்ணீர் மற்றும் காபி போட்டு கொடுக்கிறார். அப்பொழுது கார்த்திகாவிற்கு நிச்சயதார்த்தம் ஆனதை பற்றியும் கல்யாணம் நடக்கப்போவது பற்றியும் நிலா சேரனிடம் சொல்கிறார்.
அதற்கு சேரன், கார்த்திகா ரொம்ப நல்ல பொண்ணு வெகுளித்தனமாக பேசும். அதோட குணத்துக்கு எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று சொல்கிறார். ஆனாலும் சேரன் மனசிலும் ஒரு காதல் இருக்கிறது என்பதை நிலா புரிந்து கொள்கிறார். இவர்கள் சேரன் மற்றும் கார்த்திகா ஒன்று சேர்ந்ததற்கு நிச்சயம் நிலா உதவி செய்வார்.
அடுத்ததாக பாண்டியன் மெக்கானிக் கடையில் இருக்கும் பொழுது லாயர் வந்து அவருடைய பைக்கை சர்வீஸ் பண்ணுகிறார். அப்பொழுது சோழனும் நிலாவும் ஆபீஸ்க்கு வந்து விவாகரத்து கேட்ட விஷயத்தை சொல்லி விடுகிறார். உடனே பாண்டியன் வீட்டிற்கு சென்று சோழனின் சட்டையை பிடித்து விவாகரத்துக் கேட்டு லாயர் ஆபீசுக்கு போனியா என கேட்கிறார்.
அப்பொழுது அங்கே வந்த நிலா, நான் தான் விவாகரத்து கேட்டேன். எனக்கு தான் இங்கிருந்து போக வேண்டும் என்று சொல்லி சோழன் மற்றும் நிலாவிற்கு நடந்த பொம்மை கல்யாணத்தைப் பற்றியும் சொல்கிறார். இதை கேட்டு பல்லவன் பாண்டியன் அனைவரும் அதிர்ச்சியாகிய நிலையில் சேரன் எனக்கும் இந்த விஷயம் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் இவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் என்று சொல்கிறார்.
ஆனாலும் பல்லவன் அப்படின்னா எங்களை விட்டுப் போக போறீங்களா என்று பாவமாக கேட்கிறார். வந்து கொஞ்ச நாளிலே நிலா எல்லோரும் மனதிலும் இடம் பிடித்து விட்டார். நிலாவிற்கும் அந்த வீட்டில் இருப்பவர்கள் பிடித்து போய்விட்டது, அதனால் நிச்சயம் சோழனை விட்டும் அந்த குடும்பத்தை விட்டும் போக மாட்டார்.