சோழனை தொடர்ந்து பாண்டியனுக்கு நடக்கப் போகும் கல்யாணம்.. ஏமாற்றத்தில் நிலா

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா சோழனை கூட்டிட்டு கடைசி இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுவதற்கு போகிறார். அந்த வேலையின் முக்கியத்துவம் அதன் பிறகு நிலா மாறப்போகும் விஷயத்தைப் பற்றியும் ஒவ்வொன்றாக ரசித்து ஆசையுடன் சொல்லிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் எப்படியும் இந்த வேலை நமக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நிலா ஆபீஸ்க்கு போய்விடுகிறார்.

ஆனால் அந்த ஆபீஸ் நிலாவை கல்யாணம் பண்ண வந்த மாப்பிள்ளை ஆன சூர்யாவின் நண்பர் ஆபீஸ். அவரைப் பார்த்தது நிலா கோவப்பட்ட நிலையில், நிலாவை கிண்டல் அடிக்கும் விதமாக என்னை கல்யாணம் பண்ணி இருந்தால் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி இருக்கலாம். இப்பொழுது வேலை தேடி அலைவதை பார்க்கும் பொழுது ஆனந்தமாக இருக்கிறது என்று நக்கலாக பேசுகிறார்.

இதனால் நிலா, அந்த ஆபீஸ்ல இருந்து ஏமாற்றுத்துடன் வெளியே வந்து விடுகிறார். சோழன் நிலாவை பார்த்து வேலை கிடைத்து விட்டதா என்று கேட்கிறார். அப்பொழுது அங்கே சூர்யா பேசின விஷயங்களை எல்லாம் சொல்கிறார். உடனே சோழன் அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று கிளம்புகிறார். ஆனால் நிலா இது ஆபீஸ், இங்க வச்சு எந்த பிரச்சினையும் பண்ணாலும் என்னுடைய வேலைக்கு தான் ஆபத்தாகும். அதனால் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

இதற்கிடையில் பாண்டியனை தேடி மெக்கானிக் ஷாப்புக்கு வானதி போகிறார். பிறகு பாண்டியன் வந்ததும் வானதி மற்றும் பாண்டியன் இருவரும் ரொமான்ஸ் பண்ணும் அளவிற்கு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய காதல் கை கூடி விட்டது என்பதற்கு ஏற்ப பாண்டியனும் வானதியும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சோழனுக்கு கல்யாணம் ஆனதை தொடர்ந்து பாண்டியன் மற்றும் வானதிக்கு தான் கல்யாணம் நடக்கப்போகிறது. இவர்கள் கல்யாணத்துக்கு பிறகுதான் சேரன் கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.