குணசேகரன் வாங்கும் மரண அடி.. ஒட்டு மொத்த குடும்பமும் வைக்கும் ஆப்பு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தொடர் அனைவரின் மனம் கவர்ந்த சீரியலாக இடம் பிடித்து வருகிறது. குணசேகரன் நினைத்தபடி ஆதிரை கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று தீவிரமாக காரியத்தில் இறங்கி வருகிறார். இன்னொரு பக்கம் ஜனனி, ஆதிரை திருமணத்தை வைத்து தான் குணசேகரனின் மொத்த ஆட்டத்தையும் அடக்க வேண்டும் என்று அவர் வழியிலேயே போய் அவருக்கு எதிராக பிளான் போட்டு வருகிறார்.

இவருக்கு பக்கபலமாக மொத்த குடும்பமும் உறுதுணையாக இருக்கிறது. இதனை நிறைவேற்றும் விதமாக அருணிடம் பேசி அவர் மனதையும் மாற்றி யாருக்கும் தெரியாமல் அவரை ஜனனி தன்னுடைய கஸ்டடியில் வைக்க பிளான் போட்டுவிட்டார். அடுத்ததாக ஆதிரை கரிகாலன் திருமணத்திற்காக குணசேகரன் தாலி செயின் எடுப்பதற்காக அனைவரையும் நகைக்கடைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் ஆதிரையை பார்த்து அருண் பேசினால் நன்றாக இருக்கும் என்று அதற்கும் ஜனனி ஏற்பாடு செய்கிறார். ஆனால் இது எப்படியோ கதிருக்கு வேறு ஒருவர் மூலமாக தெரிய வருகிறது. அதாவது சக்தியுடன் அருண் காரில் போவதை பார்த்து கதிரிடம் ஒருவர் கூறுகிறார். இதனால் கதிர் உண்மையை கண்டுபிடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஆனால் இவர் கண்ணிலே மண்ணை தூவி ஜனனி நினைத்ததை செய்யப் போகிறார்.

அதாவது ஜனனி பிளான் படி குணசேகரன் குறித்த அதே நாளன்று ஆதிரைக்கும் அருணுக்கும் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம். அதே நேரத்தில் இந்த கல்யாணம் சீக்கிரம் முடிந்தால் தான் அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார். அவருக்கும் இந்த 40% ஷேர்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியும். மேலும் கதை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகரும்.

அத்துடன் குணசேகரனுக்கு ஒரு பெரிய தரமான சம்பவமாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் இவர் நினைத்த ஆதிரை கல்யாணமும் நடக்காது. இவர் ஆசைப்பட்ட 40% சொத்தும் இவருக்கு கையில் கிடைக்காது. இதன் பிறகு இவருடைய மொத்த கோபமும் குடும்பத்தின் அனைவர் மேலையும் திரும்பும். அப்பொழுது இவருடைய உண்மையான முகத்திரை கிழியப்படும்.

அந்த நேரத்தில் வீட்டின் மருமகள் குணசேகரனை ஜெயித்து விட்டோம் என்ற நம்பிக்கையில் இன்னும் துணிச்சலுடன் எதிர்த்து போராடுவார்கள். அப்பொழுது விழுகிற ஒவ்வொரு அடியும் குணசேகரனுக்கு மரண அடி தான். இதிலிருந்து இவரால் மறுபடியும் மீளவே முடியாது. ஏனென்றால் அப்பத்தா ஜனனி ஆசைப்பட்ட மாதிரி அந்த வீட்டின் மருமகள் சுயமாக யோசித்து முடிவை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவே குணசேகரனுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி. கூடிய சீக்கிரம் ஜீவானந்தம் வந்தால் நன்றாக இருக்கும்.