இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. சிங்கப் பெண்ணிடம் தோற்றுப் போன குணசேகரன் 

TRP Ratings List: சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் எவை என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். இதில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலும் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 8-வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் இருக்கிறது. அதை தொடர்ந்து 6-வது இடம் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது.

5-வது இடம் சுந்தரிக்கு கிடைத்திருக்கிறது. ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை சுந்தரி ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறார். அதிலும் இப்போது கலெக்டராக வேண்டும் என்ற சுந்தரியின் கனவு இப்போது நனவாகி மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து 4-வது இடம் எதிர்நீச்சலுக்கு கிடைத்துள்ளது. முன்பெல்லாம் டிஆர்பி-யில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட எதிர்நீச்சல், மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டு, இந்த வார டிஆர்பி-யில் நாலாவது இடத்தில் இருக்கிறது.

தொடர்ச்சியாக 3-வது இடத்தில் புத்தம் புது சீரியல் ஆன சிங்கப்பெண்ணே சீரியல் இருக்கிறது. இதில் ஆனந்தி தன்னுடைய அக்காவின் திருமணம் தன்னால் தடைப்படக்கூடாது என துணிச்சலுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பார்ப்பதற்கு குறும்புக்கார கிராமத்து பெண்ணாக இருக்கும் ஆனந்தி, அவ்வப்போது சிங்கம் போல் கர்ஜிக்கும் போது சிங்க பெண்ணாகவே தெரிகிறார்.

2-வது இடம் வானத்தைப் போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதில் சின்ராசு தன்னுடைய தங்கை துளசியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக நண்பனை கூட பொருட்படுத்தவில்லை. நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை அழகாக காண்பிப்பதால் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாகவே மாறிவிட்டது.

முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. இப்போதெல்லாம் கயல் எழிலிடம் நெருங்கி பழகுகிறார், ஒரு வேலை எழிலுக்கு இருப்பது போல் கயலுக்கும் காதல் வந்துவிட்டது போல் தெரிகிறது. விரைவில் கயல் எழிலின் ரொமான்ஸ் காட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியலை விடாமல் தொடர்ந்து பார்க்கின்றனர். இதனால் டிஆர்பியும் பிச்சிக்கிட்டு போகுது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →