டி ஆர் பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்த ஒரே சீரியல்

சின்னத்திரையை பொறுத்தவரையிலும் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் மத்தியில் எந்த சீரியல் ஆனது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான அனல் பறக்கும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அப்படியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை கீழே காணலாம்.

இதில் 10-வது இடத்தில் ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி  சீரியலும் இடம் பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி: இந்த சீரியலில் ரஞ்சிதம் பாட்டி எப்படியாவது தனது பேதியின் மனதில் உள்ள காதலை விக்கி இடம் தெரிவிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்களின் காதலை எப்பொழுது ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வார்கள் என்பதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கார்த்திக் பற்றிய உண்மை தெரிந்துள்ள நிலையில் அணுவிற்கு எப்ப தெரிய வரும் என்று ஆவலிலேயே இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி அனுவிற்கு மட்டும் தெரிந்து விட்டால் என்னவெல்லாம் பிரச்சனைகள் நடக்க இருக்குமோ என்பதை  ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் குணசேகரன் போட்ட திட்டத்தை ஆதிராவின் திருமணத்தை வைத்து கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார். இதன் மூலம் எப்படியாவது ஆதிராவின் திருமணம் நடந்தால் சரி என்று இருந்த நிலையில் தற்பொழுது அப்பத்தாவால் பெரும் பூகம்பமே கிளம்பியுள்ளது. இதனால் ஆதிராவின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்து வருகிறது. அதிலும் இனியா சீரியலைத் தொடர்ந்து தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் விக்ரம் செய்த தவறுகளை கண்டுபிடித்த இனியா தற்பொழுது தீர்க்கமான ஒரு முடிவினை எடுத்துள்ளார். அதிலும் இனியா தனது கணவர் என்று கூட பார்க்காமல் விக்ரமை சிறையில் அடைத்துள்ளார். அதிலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து என்ன பிரச்சனைகள் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பிலேயே நகர்ந்து வருகிறது. இனியா சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

வானத்தைப்போல: இந்த சீரியலில் வெற்றி எப்படியாவது துளசியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்து வருகிறார். இதனால் மறைமுகமாக வாழ்ந்து வரும் வெற்றி எப்படியாவது துளசியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்து போலீசுக்கே தண்ணி காட்டி வருகிறார். இதனால் குடும்பமே நிலைகுலைந்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியல் ஆனது நகர்ந்து வருகிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில்  வானத்தைப்போல சீரியல் ஆனது 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் எப்பொழுதும் கயலை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்து வரும் பெரியப்பாவின் அராஜகம் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கயல் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே தங்களது பெரியப்பாவின் மீது பயங்கர கோபத்தில் உள்ளனர். இப்படி பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியல் ஆனது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் கயல் சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசைக்க முடியாத அசுரனாகவே மாறி உள்ளது.

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஒரே சேனலில் இடம் பிடித்த இரண்டு சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒரே இடத்தை பிடித்துள்ளது. அதிலும் கயல் சீரியல் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்த ஒரே சீரியலாகவே இருந்து வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →