டிராபிக் போலீஸ் அருண் மறைமுகமாக மீனாவுக்கு செய்யும் உதவி.. சுருதியை புரிந்து கொள்ளாமல் சண்டை போடும் ரவி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா சிந்தாமணி இடம் தோற்க கூடாது என்ற எண்ணம் முத்துவை விட சீதாவிற்கு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் தன்னுடைய கல்யாணத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை மீனாவிடம் கொடுத்து உதவினார். ஆனாலும் மீத பணம் தேவைப்படுமே என்று யோசித்த சீதா, அருணிடம் உங்களுக்கு தெரிஞ்சவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தர முடியுமா என்று கேட்கிறார்.

அதற்கு அருண் எனக்கு அந்த மாதிரி யாரையும் தெரியாது, வட்டிக்கு பணம் வாங்கியும் பழக்கம் இல்லை. அதனால் என்னிடம் இருக்கும் பணத்தை நான் தருகிறேன். உங்க அக்காவுக்கு பணம் கிடைத்துடன் எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று மறுத்த சீதா, அருண் வற்புறுத்தியதால் பணத்தை வாங்கி விடுகிறார்.

உடனே மீனாவுக்கு போன் பண்ணி ஹாஸ்பிடலுக்கு வா என்று சீதா கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் வீட்டில் முத்துவுடன் ஒரு ரகளை ஏற்படுகிறது. அதாவது அருணை பழிவாங்க வேண்டும் என்று இரவு முத்து குடிச்சிட்டு மீனாவிடம் பிரச்சினை பண்ணினார். பிறகு மறுநாள் காலையிலும் குடித்தது தெளிந்த பிறகும் கூட அருண் மீது கோபத்துடன் பேசி மீனாவை நோகடிக்கிறார்.

அந்த நேரத்தில் சுருதி மற்றும் ரவி வந்து முத்து மீதுதான் தவறு இருக்கிறது என்பதை எடுத்து சொல்கிறார்கள். ஆனாலும் முத்து யார் சொல்வதையும் கேட்காமல் அருண் மீது தான் தவறு இருக்கிறது என்பது போல் பேசி சுருதி மற்றும் மீனாவை திட்டி விடுகிறார். உடனே ஸ்ருதி உங்க அண்ணன் எந்த நேரத்தில் என்ன பண்ணுவார் என்ன பேசுவார் என்பதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

மீனாவுக்கும் சீதா போன் பண்ணி கூப்பிட்டதால் எதுவும் சொல்லாமல் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். உடனே முத்து, ரவியிடம் மீனா வெளியே தான் போறா, ஆனா எங்க போற எதுக்கு போற என்று சொல்லாமல் இஷ்டத்துக்கு போகிறார் என்று கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். அதற்கு ரவி நீ பண்ணின விஷயத்துக்கு யார் உன்னிடம் நின்னு பேச முடியும் என்று சொல்லி மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி விடுகிறார்.

பிறகு சீதாவை சந்தித்த மீனா தெரிந்தவரிடம் பணம் வாங்கினேன் என்று சொல்லி மீனாவுக்கு மீதம் தேவைப்படுகிற பணத்தை கொடுத்து உதவி செய்கிறார். மீனா சந்தோஷப்பட்டு சீதாவுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அடுத்ததாக ரவி வேலை பார்க்கும் ஹோட்டலில் சுருதி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அங்கே வந்த இரண்டு இளைஞர்கள் சுருதியிடம் ரொம்பவே தவறாகவும் கொச்சியான வார்த்தைகளையும் பேசியதால் சுருதி சூப்பு கொடுக்கும் பொழுது அதில் அதிகமான மிளகாய் பொடி போட்டு கொடுத்து விடுகிறார். இதனால் அதைக் குடித்துவிட்டு அந்த இளைஞர்கள் அங்கே பிரச்சினை பண்ணிய பொழுது ரவி மற்றும் நீத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சுருதியிடம் சொல்கிறார்கள்.

ஆனால் சுருதி என் மீது எந்த தவறும் இல்லை நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் வேண்டுமென்றால் என்னை வேலை விட்டு கூட தூக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி போய் விடுகிறார். ஆனால் ரவி, சுருதியிடம் நீ செஞ்சது தவறுதான். இது ஒன்னும் தப்பு பண்ணவர்களை கண்டிப்பதற்கு பொதுவான இடமும் இல்லை நம்ம வீடும் இல்லை.

இது அவர்களுடைய ஹோட்டல் இதற்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சுருதியிடம் சண்டை போடுகிறார். ஆனால் ஸ்ருதி செஞ்சது தவறு இல்லை என்று ரவி சப்போட்டாக நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஹோட்டலின் இமேஜ் மற்றும் நீத்துகாகவும் வக்காலத்து வாங்குவது சரியே இல்லை.