Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அய்யனார் வீட்டில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு நினைக்கிறார்களோ, அதைவிட சோழன் நிலாவின் சந்தோஷத்திற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணுகிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் நிலா, சோழனை உதாசீனப்படுத்தி திட்டிக் கொண்டே இருக்கிறார்.
இதனால் கடுப்பான சோழன், அமைதியாக இருந்தாலும் நடேசன் சோழனை சீண்டி பார்க்கும் விதமாக மற்றவர்களுக்கு நிலா தங்கச்சி. அதே மாதிரி உனக்கும் தங்கச்சியாக தான் கடைசி வரை இருக்கப் போகிறார். இந்த வீட்டில் இருப்பவர்கள் உன்னை யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க என்று சொல்லி சோழனை இன்னும் கோபப்படுத்துகிறார்.
சோழனுக்கு ஏற்கனவே வேலையும் போய்விட்டது, இதனால் ட்ராவல்ஸ் க்கு போன இடத்திலும் மரியாதையும் இல்லை வேலையும் இல்லை என்றதும் நினைத்து வருத்தப்படுகிறார். அதே வருத்தத்துடன் வீட்டுக்கு வரும்பொழுது சோழனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சிரித்து பேசிக்கொண்டு சாப்பிடுவதை பார்க்கிறார். அப்படி பார்த்ததும் வீட்டுக்குள் போகாமல் வாசலிலே இருக்கிறார்.
உடனே நடேசன், நீ வராமல் சேரன் சாப்பிடவே மாட்டான். இப்பொழுது நீ வந்தா என்ன வரலடா என்ன என்று உன்னை பற்றி கவலைப்படாமல் புதுசா வந்த பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். பெண்கள் இல்லாத வீடு என்று சொல்லி சொல்லி இப்பொழுது ஒரு பெண் வந்ததும் அவளை ஏதோ பொக்கிஷமாக நினைத்து அனைவரும் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அவள் உன் மூலமாகத்தான் வந்தால் என்பதை மறந்துவிட்டு உன்னை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுக்கும் அளவிற்கு சோழனை கோபப்படுத்தி விடுகிறார். இதனால் எரிச்சலுடன் வீட்டை விட்டு சோழன் கிளம்பி நேராக குடிப்பதற்கு போய்விடுகிறார். அங்கே கார் உடைய உரிமையாளரும் சோழனும் சேர்ந்து அதிக அளவில் குடித்து விடுகிறார்கள்.
அப்படி குடித்ததால் நிதானம் இல்லாமல் வீட்டிற்கு வந்த சோழன் நேரடியாக நிலாவின் ரூமுக்கு போய் விடுகிறார். அங்கே நிலா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்திலேயே தூங்கி விடுகிறார். இதனால் பயந்து போன நிலா எழுந்து என்னாச்சு ஏன் இங்க வந்திருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு சோழன் இப்போ ஏன் இவ்ளோ பதட்டம் அடைகிறாய்.
நான் ஒன்னும் வேற யாரோ கிடையாது, உனக்கு தாலி கட்டின புருஷன் தான். எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்கிறார். இதனால் நிலா, சோழனிடம் சண்டை போட போகிறார். பிறகு சத்தத்தை கேட்டு சேரன் பாண்டியன் பல்லவன் எழுந்து வந்து சோழனை திட்டி செய்தது தவறு என்று சண்டை போட போகிறார்கள். இதனால் இவர்களுடைய ஒற்றுமையில் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.