TRP Rating: சன் டிவி vs விஜய் டிவி.. சீரியலில் தோற்றுப்போன கதாநாயகன்

TRP Rating: டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரம் எந்த சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியல் 11.27 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதில் ஆனந்தி கர்ப்பமான விஷயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் குடும்பமே ஆனந்திக்கு சப்போர்ட் செய்து ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கிறார்கள். அத்துடன் அன்புவும் நான் இருக்கிறேன் என்று ஆனந்திக்கு உறுதுணையாக வந்திருக்கிறார்.

அடுத்ததாக நந்தினிக்கு இங்கிலீஷ் கத்து கொடுத்து சுந்தரவல்லிக்கு எதிராக கெத்தாக நிப்பாட்ட வேண்டும் என்று சூர்யா முயற்சி எடுக்கிறார். ஆனால் இந்த முயற்சியை கெடுக்கும் விதமாக மாதவி பல குளறுபடிகளை பண்ணுகிறார். இந்த விஷயம் கல்யாணம் மூலம் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதனால் மாதவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா சம்பவம் செய்யப் போகிறார். இந்த வாரம் 10.70 புள்ளிகளை பெற்று மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதனை அடுத்து கயல் 9.33 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திலும், எதிர்நீச்சல் சீரியல் 9.02 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், அன்னம் 8.65 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும், ஆறாவது இடத்தில் 8.51 புள்ளிகளை பெற்று மருமகள் சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் ஏதாவது ஒரு இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்கும் ஆசை சீரியல் வந்துவிடும்.

ஆனால் இந்த வாரம் சன் டிவி இடம் தோற்றுப் போய்விட்டது என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சிறகடிக்கும் ஆசை சீரியல் 8.04 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திற்கு போய்விட்டது. சீரியல் என்றாலே சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டுகிறது.