அரசி சொன்ன உண்மை, அப்பத்தா செய்யப் போகும் சம்பவம்.. மௌனமாக நிற்கும் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் மனதில் இருக்கும் விஷயத்தை போட்டு உடைத்தது போல் எல்லா பாரத்தையும் பாண்டியனிடம் கொட்டி தீர்த்து விட்டார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ந்து போன நிலையில் பாண்டியன் மற்றும் கோமதி கொஞ்சம் கொஞ்சமாக தேறிக்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தங்கமயில் மற்றும் சுகன்யா இரண்டு பேருமே ஒன்று தான் என்பதற்கு ஏற்ப எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இதற்கெல்லாம் அசராத கோமதி, பாண்டியனை சமாதானம் செய்து மீனா மற்றும் செந்திலிடம் பழைய மாதிரி பேச ஆரம்பித்து விட்டார். இந்த சூழ்நிலையில் குமரவேலு, கதிரை சீண்டும் விதமாக போட்ட டிராமா அரசி பற்றிய உண்மை வெளிவந்துவிட்டது.

அதாவது குமரவேலு வேறு ஒரு பெண்ணுடன் சுற்றி வருகிறார் என்று கதிர் மீனா குழலி 3 பேரும் சேர்ந்து சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள். அந்த வகையில் கதிர், குமரவேலு செய்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிய பொழுது அரிசி இவன் என்னுடைய புருஷனை இல்லை.

இவனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கவில்லை, இவன் என் கழுத்தில் தாலி கட்டவில்லை என்று நடந்த உண்மையை சொல்லி தனக்கு தானே தாலி கட்டிய ரகசியத்தை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் மௌனமாக நிற்கிறார்கள். ஆனால் அப்பத்தா இந்த உண்மையை தெரிந்தவுடன் அமைதியாக அரசியை வீட்டிற்குள் கூட்டிட்டு போய் விடுகிறார்.

ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் கோமதி தான் அரசியே அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்கணும். அதை விட்டுவிட்டு அப்பத்தா ஏன் கூட்டிட்டு போக வேண்டும், அதை பார்த்து ஏன் கோமதி குடும்பத்தில் இருப்பவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று தான் கேள்வியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த விஷயங்கள் அனைத்தும் பாண்டியனுக்கு இன்னும் தெரியவில்லை.

அப்பத்தா உள்ளே கூட்டிட்டு போய் குமரவேலுக்கு அரசிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணப் போகிறது. ஆனால் பாண்டியன் அப்படி எதுவும் நடக்க கூடாது என்று தடுத்து அரசியை பழைய மாதிரி அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார். அதன் பின் அரசி, கோமதி மற்றும் பாண்டியனின் மகளாக அந்த வீட்டில் வாழும் பொழுது இனி குமரவேலுக்கும் அரசிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →