வீரா சீரியலில் விஜி முன் சண்டைக்கோழியாக மாறிய வீரா கண்மணி.. சப்போர்ட் பண்ணும் மாறன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்களை நிம்மதி இல்லாமல் ஆக்க வேண்டும் என்று விஜி ஒவ்வொரு பிளானாக போட்டு வருகிறார். ஆனால் விஜியின் உண்மையான முகத்திரை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்த மாறன் மற்றும் வீரா, கண்மணி மூலம் காய் நகர்த்துகிறார்கள்.

கண்மணி ராமச்சந்திரன் குடும்பம் பிடிக்காத போல் டிராமா பண்ணுகிறார். விஜியும் அதை நம்பி கண்மணி உடன் கூட்டணி போட ஆரம்பித்து விட்டார். அப்படி இரண்டு பேரும் நெருங்கும்பொழுது விஜி பற்றிய ரகசியம் என்னவென்று கண்மணி கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் விஜி பார்க்கும் பொழுது எல்லாம் கண்மணி, வீராவிடம் ராமச்சந்திரன் குடும்பத்தின் மீது கோபமாக இருப்பது போல் சண்டை போடுகிறார்.

அந்த வகையில் எனக்கு முதல் எதிரி வள்ளி தான். அந்த வள்ளியை நான் சும்மா விடமாட்டேன் என்று கண்மணி, வீராவிடம் சொல்கிறார். உடனே வீரா நான் இருக்கும் வரை என்னுடைய மாமனார் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் நடக்க விடமாட்டேன் என்று சவால் விடுகிறார். இப்படி இவர்கள் சண்டை போடும் பொழுது விஜி அதை பார்த்துக்கொண்டு அக்கா தங்கச்சிகள் இப்படித்தான் சண்டை போடணும்.

அப்பொழுதுதான் நான் நினைச்ச காரியம் நடக்கும் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். அதன் பிறகு விஜி போனதும் மாறன் வந்து வீரா மற்றும் கண்மணி போடும் சண்டையை நிப்பாட்டும் விதமாக விஜி இங்கிருந்து கிளம்பி போய்விட்டாள்.

போதும் உங்களுடைய டிராமாவை நிறுத்திக் கொள்ளுங்கள், ஆனாலும் அக்கா தங்கச்சிகளின் நடிப்புக்கு ஈடே இல்லை. மகா நடிகைகளாகத்தான் இருக்கீங்க என்று கலாய்க்கிறார். மேலும் விஜியை வீட்டை விட்டு விரட்டும் விதமாக வீரா மற்றும் கண்மணிக்கு சப்போர்ட்டாக மாறன் துணையாக இருக்கிறார்.