காவேரி வீட்டில் பிரச்சினை பண்ணிய வெண்ணிலா.. விஜய் இடம் விவாகரத்து கேட்கும் சாரதா

Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா மற்றும் வெண்ணிலாவின் மாமா மனசில் விஜய் மற்றும் காவிரியை பற்றி தவறாக சொல்லி பசுபதி மற்றும் ராகினி நினைத்த விஷயத்தை சாதித்து விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி வெண்ணிலாவின் மாமாவும் விஜய் வீட்டிற்கு சென்று நாளைக்கு உங்களுக்கும் வெண்ணிலாவுக்கும் கோவிலில் கல்யாண பண்ணி வைப்பதற்கு ஏற்பாடுகள் பண்ணியிருக்கிறோம்.

நீங்கள் நிச்சயம் வந்து பிரச்சினை பண்ணாமல் வெண்ணிலா கழுத்தில் தாலி கட்ட வேண்டும். அப்படி வரவில்லை என்றால் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம். அதற்கு காரணம் நீங்கள் தான் என்று லெட்டர் எழுதி வைத்து விடுவோம் என்று மிரட்டி விட்டு போய்விடுகிறார். இதனால் அப்செட் ஆன விஜய் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் காவேரி வீட்டிற்கு சென்று வெண்ணிலா வாய்க்கு வந்தபடி திட்டி காவிரியை அசிங்கப்படுத்தி பேசி நாளைக்கு எனக்கும் விஜய்க்கும் கல்யாணம் நடக்கும் பொழுது காவிரியும் உங்க குடும்பமும் வந்து எந்த பிரச்சினையும் பண்ண கூடாது என்று அட்டகாசம் பண்ணி விட்டார். இதனால் கோபப்பட்ட சாரதா நாங்கள் ஏன் வரப் போகிறோம், நீ உன் இஷ்டப்படி எல்லாத்தையும் செய் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே சாரதா, விஜய்க்கு போன் பண்ணி வெண்ணிலா வந்து பிரச்சனை பண்ணியதை சொல்லி விஜய்யை திட்டுகிறார். அத்துடன் உங்களாலும் அந்த வெண்ணிலா மூலமாகவும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றால் நீங்கள் காவிரியே விவாகரத்து பண்ணினால் மட்டும்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.

இதனால் பயந்து போன விஜய், சாரதாவை நேரில் சந்தித்து பேசலாம் என்று வீட்டிற்கு வருகிறார். ஆனால் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கூட கேட்காத சாரதா, உங்களுக்கும் காவேரிக்கும் விவாகரத்து ஆக வேண்டும். இதைப் பற்றி நான் ஏற்கனவே காவிரியிடம் சொல்லி விட்டேன், அவள் மனசை நாங்கள் எப்படியும் மாற்றி விடுவோம். நீங்களும் கூடிய சீக்கிரத்தில் விவாகரத்து கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறார்.

உடனே பொருட்காட்சியில் இருக்கும் காவிரியை பார்த்து பேசுவதற்காக விஜய் அங்கே போகிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை சொல்லிய விஜய் இன்னும் நீ ஏன் அமைதியாக இருக்க வேண்டும். இனிமேல் யாரைப் பற்றி யோசிக்க முடியாது நம்ம குழந்தையை பற்றி மட்டும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நீ என்னுடன் கிளம்பி வா என்று கூப்பிடுகிறார்.

ஆனால் வழக்கம் போல் காவிரி, வெண்ணிலா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு நான் வருகிறேன் என்று சொல்லி விஜய்யை அனுப்பி விடுகிறார். இதனால் வெண்ணிலா மாமா சொன்னபடி கோவிலுக்கு சென்று விஜய் அங்கே இருப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்பவம் செய்யப்போகிறார்.