Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கங்காவை வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் நல்லபடியாக கவனித்து வருகிறார்கள். அத்துடன் கங்கா கூடவே இருந்து குமரனும் அன்பும் அக்கறையும் காட்டி பார்த்து வருகிறார். இதனை பார்த்த காவிரிக்கு சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நம் கூடவே விஜய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏக்கம் வர ஆரம்பித்துவிட்டது.
ஆனாலும் கங்காவுக்கு எல்லா வேலையும் செய்யும்படி காவிரி நிலைமை அமைந்திருப்பதால் காவிரியால் சரியாக மருந்து மாத்திரை எடுத்து சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. குமரன் கங்காவுக்கு மருந்து கொடுக்கும் பொழுது நாமும் இந்த நேரத்தில் இப்படி மருந்துகளை சாப்பிட வேண்டுமே என்று எண்ணிக் கொள்கிறார். அடுத்ததாக விஜய் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் ஹவுஸ் ஓனரிடம் குமரன் மற்றும் கங்காவின் மாமியார் பேசிக் கொண்டிருப்பதை கேட்கிறார்.
அந்த வகையில் கங்கா தான் கர்ப்பமாக இருக்கிறார் என்று விஜய் புரிந்து கொண்டார். இருந்தாலும் காவிரியை பார்த்து பேச வேண்டும் என்று கடைக்கு போயிட்டு வரும் காவிரியை விஜய் சந்தித்து பேசுகிறார். அப்படி பேசும் பொழுது வெண்ணிலா பிரச்சினை பற்றி காவிரி கேட்கிறார். அதற்கு விஜய், வெண்ணிலாவை மறந்து நான் வேறொரு கல்யாணத்தை பண்ணியதை வெண்ணிலவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால் ரொம்பவே ஃபீலிங்கோட தான் இருக்கிறார். அதற்காகத்தான் நான் வெண்ணிலாவின் மாமா எங்கே இருக்கிறார் என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி பார்க்கும் பொழுது தான் ஓனர் எனக்கு கால் பண்ணி பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது சரியாக சொல்லாமல் உங்க வீட்டில் ஒரு குட்டி வாரிசு வரப்போகிறது என்று சொல்லி போனை கட் பண்ணிட்டார்.
உடனே நான் நீதான் கர்ப்பமாக இருக்கிறாயோ என்று சந்தோசப்பட்டு உன்னை பார்க்க வந்த போது தான் தெரிந்தது உன்னுடைய அக்கா கோதாவரி தான் கர்ப்பமாக இருக்கிறார் என்று. இதை கேட்ட காவிரி நான் கர்ப்பமாக இருந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க என்று கேட்ட பொழுது உன்னை தரையிலேயே விடமாட்டேன் பொக்கிஷமாக பாதுகாப்பேன். இன்னும் என்னெல்லாமோ செய்வேன் ஆனால் அதை என்னால் வார்த்தையால் சொல்ல முடியாது என்று விஜய் அவருடைய மொத்த உணர்வையும் கொட்டுகிறார்.
ஆனால் அப்பொழுது கூட நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்பதை காவிரி சொல்ல மறுத்துவிட்டார். அடுத்ததாக வெண்ணிலாவின் மாமா வரப்போகிறார். ஆனால் அவர் விஜய்க்கு சப்போர்ட்டாக இல்லாமல் வெண்ணிலாவே வைத்து விஜய்க்கு டார்ச்சர் கொடுப்பதற்கு வருகிறார். ராகினி பசுபதி அஜய் வெண்ணிலா மற்றும் மாமா அனைவரும் ஒரு கூட்டணி போட்டு காவிரி மற்றும் விஜயின் வாழ்க்கையில் பிரச்சனை செய்யப் போகிறார்கள்.