வெண்பா மகனின் பெயர் சூட்டு விழா.. கலக்கலாக வந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரமான வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் பரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இவர் கர்ப்பமாக இருக்கும்போதே பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகாமல் தொடர்ந்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார். எனவே பிரசவத்திற்காக சென்றிருக்கும் பரீனாவிற்காக சீரியலின் இயக்குனர் கதையை மாற்றியமைத்து வெண்பா கதாபாத்திரத்தை சிறையில் இருப்பதாக காண்பித்து சில நாட்கள் வெண்பாவை காட்டாமலே வைத்துள்ளனர்.

அதன் விளைவால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிப்பதற்கான ஷூட்டிங்கில் தற்போது கலந்து கொண்டிருக்கிறார். தற்போது முழுமையாக குணமடைந்த பரீனா மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் மீண்டும் தனது வில்லத்தனமான நடிப்பை காட்ட உள்ளார்.

இன்னிலையில் பரீனாவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இதில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலங்களும், பிக் பாஸ் சீசன்4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

bk-farina-cinemapettai
bk-farina-cinemapettai

மேலும் பரீனாவின் ஒருமாத  குழந்தைக்கு இஸ்லாமிய முறைப்படி ஜைன் லாரா ரஹ்மான் (Zayn Lara Rahman) என்ற வித்தியாசமான பெயரை சூட்டப்பட்டுள்ளர். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி பரீனாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.