கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்.. மக்களை மீட்டெடுத்த மாமன்னன் வீடியோ

Mariselvarj Saved People: தென் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கன மழை பெய்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகிய அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் இருக்கும் மக்களை மீட்டெடுப்பதற்காக கடவுள் மாதிரி உதவி செய்து வருகிறார்.

இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்ததால் இவர்களுடைய நெருக்கம் ரொம்பவே அதிகமாகி விட்டது. இதன் காரணமாக மாரி செல்வராஜ் தற்போது இக்கட்டண சூழ்நிலையில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்ததும் உடனே உதவி பண்ணுவதற்காக உதயநிதியும் களம் இறங்கி விட்டார்.

அத்துடன் மாரி செல்வராஜ் தற்போது தன்னுடைய சொந்த கிராமத்தின் மக்களை போட் மூலம் கரையேற்றி வருகிறார். மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஒவ்வொருவரையும் காப்பாற்றி மாமன்னனாக திகழ்ந்து வருகிறார். படகுகள் மூலம் செல்ல முடியாத ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அங்கு இருக்கும் மக்களை பாதுகாப்பாக கூட்டிட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் வயது மூத்தவர்களையும் கட்டிலில் படுக்க வைத்து பாதுகாப்பாக கூட்டிட்டு வந்து அவர்களுக்கு தேவையான உணவுகளையும் கொடுத்து வருகிறார். இப்படி இவர் அவருடைய சொந்த ஊருக்காக செய்யும் உதவியை பார்க்கும் பொழுது உண்மையிலேயே சிறந்த ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்கிற அடையாளத்தையும் இவரிடம் பார்க்க முடிகிறது.

பொதுவாக ஒருவர் அடுத்த கட்ட முன்னேற்றத்தை பார்த்ததும் பழசை எல்லாம் மறந்து விடுவார்கள். முக்கியமாக அவர்களுடைய கிராமத்தைப் பற்றி யோசிக்கும் அளவிற்கு கூட நேரம் கிடைக்காத அளவிற்கு பிஸியாகி விடுவார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு இடையில் மாரி செல்வராஜ் இயக்குனராக இமேஜை வளர்த்துக் கொண்டாலும் தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் முதல் ஆளாக இருந்து உதவி செய்து வருவது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கிறது.