ஒன்று சேர்ந்த விஜய் காவேரி.. கொடைக்கானலில் ஆரம்பமாகும் டூயட்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி குடும்பத்தை பழிவாங்கி விஜய் காவேரியை பிரித்து விட வேண்டும் என்று பசுபதி ராகினி பிளான் பண்ணினார்கள். வழக்கம்போல் வில்லன்கள் போடும் பிளான் ஆரம்பத்தில் ஜெயிப்பது போல் இருந்தாலும் முடிவில் அது தோற்றுப் போய்விடும். அந்த வகையில் பசுபதி போட்ட பிளானில் தோற்று ஜெயிலில் களித்திங்க போய்விட்டார்.

ஆனால் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் வெண்ணிலாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கும் வகையில் காவிரி குழந்தை மீது சத்தியத்தை செய்து விஜய்யை உனக்கு விட்டு கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதன்படி காவேரி, விஜய்யை விட்டு கொடைக்கானல் போவதற்கு தயாராகி விட்டார். ஆனால் அதற்குள் வெண்ணிலாவிற்கு விஜய் மற்றும் காவிரியின் காதல் புரிதல் எல்லாம் புரிந்து விட்டது.

அதனால் வாழ்க்கையில் இவர்கள்தான் ஒன்று சேர வேண்டும் என்று முடிவு பண்ணி காவேரி சத்தியம் பண்ணிய விஷயத்தை விஜய் இடம் சொல்லி கொடைக்கானலுக்கு போக இருந்த காவேரியை சந்திக்க இருவரும் வந்து விட்டார்கள். வந்ததும் விஜய், காவிரியை திட்டி என்னை விட்டு போக உனக்கு எப்படி மனசு இருந்தது என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.

உடனே வெண்ணிலா உன்னுடைய காதல் தான் பெரிது, என்னுடைய காதல் ஒண்ணுமே இல்லை என்று சொல்லிவிட்டு மாமாவுடன் கிளம்பி விட்டார். அந்த வகையில் விஜய் மற்றும் காவிரி எல்லா பிரச்சினையும் தாண்டி தற்போது ஒன்று சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் தனியாக கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்று இரண்டு பேரும் கொடைக்கானலுக்கு போவதற்கு தயாராகி விட்டார்கள்.

கொடைக்கானலில் ஒரே டூயட் தான் என்று சொல்வதற்கு இருப்பர் விஜய் காவேரி சந்தோசமாக இருக்கப் போகிறார்கள். அடுத்ததாக சாரதாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்த நிலையில் இவர்களுடைய வாழ்க்கைக்கு பச்சைக்கொடி காட்டி விடுவார். பிறகு யமுனா, நவீன் செஞ்ச நல்ல காரியத்தை புரிந்து கொண்டு நவீனுடன் சந்தோஷமாக இருப்பார்.