மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் மாமாவை கையோடு கூட்டிட்டு வரும் விஜய்.. சந்தோஷத்தில் காவிரி, நடுவே வந்த ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை நவீனுக்கு மட்டும் தெரிந்த நிலையில் காவிரி கஷ்டப்படும் போது நவீன் உதவி செய்தார். இந்த உதவியை பார்த்த யமுனா சந்தேகப்பட்டு வீட்டிற்கு வந்த நவீன் இடம் சண்டை போடுகிறார். அதற்கு நவீன் காவிரி எனக்கு முக்கியமா இல்லையா என்பதை விட நீ எனக்கு முக்கியம் என்று சொல்வதற்கு நீ எனக்கு என்ன செய்திருக்கிறாய்.

என்னை பிளாக்மெயில் பண்ணி தான் கல்யாணம் பண்ணிட்டு வந்தாய், அதோடு விட்டியா என்னையும் காவிரியையும் சேர்த்து வைத்து சந்தேகப்பட்டு பேசுகிறாய். உன்னுடைய அக்காவின் வாழ்க்கை உன்னால் தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் தொடர்ந்து காவிரியும் என்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு வருகிறாய் என்று நல்ல நாலு கேள்வி கேட்டுவிட்டு போய்விடுகிறார்.

அடுத்ததாக காவிரி பிசினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு போவதற்கு முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் பொருட்காட்சியில் ஸ்டால் போடுவதற்கு இடம் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அதற்குள் அந்த இடம் எல்லாம் போய்விட்டது என்று தெரிந்ததும் வீட்டில் இருக்கும் அப்பளக்கட்டை கடையில் கொடுத்துட்டு வருவதற்காக காவேரி போய்க் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜய், காவிரிக்கு போன் பண்ணி வெண்ணிலாவின் மாமாவை நேரில் சந்தித்து பேசி நடந்த விஷயத்தை எல்லாம் புரிய வைத்து விட்டேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு வெண்ணிலவை கூட்டிட்டு வருவதற்கு முழு சம்மதத்தையும் தெரிவித்துவிட்டார். அத்துடன் வெண்ணிலவே தன்னுடைய சொந்த மகள் போல பார்த்துக் கொள்வதாக என்னிடம் உறுதியாக சொல்லி இருக்கிறார்.

தற்போது அவர் வீட்டு பக்கத்தில் தான் நின்று கொண்டு தான் உனக்கு போன் பேசுகிறேன். கையோடு அவரை கூட்டிட்டு வந்து வெண்ணிலவை அனுப்பி வைத்து விடுவேன். அதன் பிறகு நீயும் நானும் ஒன்று சேர்ந்து விடலாம் யாராலையும் தடுக்க முடியாது என்று காவேரியிடம் ஃபோனில் பேசுகிறார். இதைக் கேட்டதும் காவிிருக்கும் சந்தோஷம் வந்துவிட்டது.

ஆனால் இந்த விஷயத்தை இவ்வளவு எளிதாக ராகினி நடக்க விடமாட்டார். அந்த வகையில் பசுபதி அஜய் ராகினி 3 பேரும் சேர்ந்து வெண்ணிலாவின் மாமாவை சந்தித்து பேசி காவேரி மற்றும் விஜய்க்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக ஏதாவது பிளான் பண்ணி தொந்தரவு பண்ணுவார்கள்.