ராகினியை வீட்டை விட்டு துரத்திய விஜய்.. சப்போர்ட்டாக நிற்கும் காவேரி, சதி செய்யும் பசுபதி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா சாரதா வீட்டுக்கு சென்று பிரச்சனை பண்ணியதால் கோபப்பட்ட சாரதா, விஜய்க்கு போன் பண்ணி என் மகளுக்கு விவாகரத்து கொடுத்து எங்களை நிம்மதியாக வாழ விடுங்க என சொல்கிறார். உடனே விஜய், வெண்ணிலா பிரச்சனை பண்ணியதற்காக சாரதா வீட்டுக்கு சென்று சாரதாவிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக போகிறார்.

ஆனால் போன இடத்தில் விஜய்யை பேசவிடாமல் சாரதா வாய்க்கு வந்தபடி பேசி விடுகிறார். அத்துடன் என் மகளுக்கு நீங்கள் விவாகரத்துக் கொடுக்க வேண்டும். இதைப் பற்றி ஏற்கனவே நான் காவிரியிடமும் பேசி விட்டேன். அதனால் எங்களை பார்த்து மறுபடியும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று கையெடுத்து கும்பிடுகிறார்.

உடனே விஜய் இதைப் பற்றி காவிரியிடம் பேசலாம் என்று பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே போனதும் வெண்ணிலா வீட்டிற்கு போய் பிரச்சனை பண்ணிய விஷயத்தை விஜய் காவிரியிடம் சொல்கிறார். அதற்கு காவிரி ஏற்கனவே அம்மா வேறொரு பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுல வெண்ணிலா வேற போய் பேசினால் இன்னும் அம்மா என்னெல்லாம் முடிவு பண்ணுவாங்களோ தெரியலையே என புலம்புகிறார்.

அதற்கு விஜய் என்ன விவாகரத்து பண்ண சொல்கிறார்களா என கேட்கிறார். ஆமாம் என்று காவிரி சொன்ன நிலையில் விஜய் இப்பொழுதும் நீ அவங்களுக்காக தான் யோசிக்க போகிறாயா? உங்க அம்மா என்ன சொன்னாலும் நீ தான் உடனே கேட்டு விடுவியே, அப்படி என்றால் என்னை விவாகரத்து பண்ணுவியா என்ன கேட்கிறார். அதற்கு காவிரி உங்க விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் நான் காது கொடுத்து கூட கேட்க மாட்டேன்.

அது மட்டும் இல்லாமல் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களுக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். அதனால் என்னைப் பற்றி யோசித்து கவலைப்படாமல் வெண்ணிலா பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என சொல்கிறார். அப்படியே இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே பத்திரிகையாளர்கள் வந்ததால் இவர்கள் இருவரையும் போட்டோ எடுத்து கேள்வி கேட்கிறார்கள்.

உடனே விஜய் அவர்களை தனியாக கூட்டிட்டு போய் காவிரி தான் என்னுடைய மனைவி. எனக்கும் அவங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை வீட்டில் சின்ன குழப்பம் அதை சரி பண்ணுவதற்காக தான் நாங்கள் இரண்டு பேரும் தற்போது தனியாக இருக்கிறோம். எத்தனை வருஷம் ஆனாலும் என்னுடைய மனைவி காவிரி தான் என்று பத்திரிகையாளரிடம் தெளிவான வாக்குமூலத்தை கொடுத்து விடுகிறார்.

அடுத்ததாக விஜய் வீட்டிற்கு போனதும் ராகினியை கூப்பிட்டு இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் நீயும் உங்க அப்பாவும் தானே. என்னையும் காவிரியும் சந்தோஷமாக இருக்க விடக்கூடாது என்பதற்காக வெண்ணிலா மற்றும் வெண்ணிலாவின் மாமா மனசை குழப்பி இவ்வளவு தூரம் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கீங்க. இதுக்கு மேலேயும் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லிய நிலையில் அஜய் வந்த பொழுது அஜயையும் அடித்து விட்டு அஜய் மற்றும் ராகினியை வீட்டை விட்டு விஜய் அனுப்பி வைக்கிறார்.

இந்த கோபத்தை எல்லாம் தீர்க்கும் விதமாக பசுபதி கோவிலில் விஜய் வெண்ணிலாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணுகிறார். ஆனால் பசுபதிக்கு ஏற்கனவே தெரியும் விஜய், வெண்ணிலா கழுத்தில் தாலி கட்ட மாட்டார் என்று. ஆனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வைத்தால்தான் விஜய்யை ஜெயிலுக்குள் அனுப்ப முடியும் என்பதற்காக பசுபதி சதி செய்து எல்லா வேலையும் பார்க்கிறார்.

அந்த வகையில் விஜய் மற்றும் அஜயின் அப்பா, வெண்ணிலாவின் குடும்பம் இறந்ததற்காக ஜெயிலுக்கு போவதற்கு ஆன சீன்கள் வரப்போகிறது. ஆனால் என்ன நடந்தாலும் காவேரி விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் விதமாக இருப்பதால் எல்லா பிரச்சனையும் சரி செய்துவிட்டு காவிரியை விஜய், வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார்.