Serial: சுவாமிநாதன் என்கிற விஜய் தமிழில் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்ததின் மூலம் அனைவருக்கும் பிரபலமானார். இவருடைய நடிப்பும் ஸ்டைலும் பார்ப்பவர்களை கவர்ந்ததால் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது மகாநதி சீரியலில் விஜய் என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு வந்து கொண்டே இருக்கிறது.
இவருக்கு என்று ஒரு முத்திரையை உருவாக்கும் விதமாக விகா என்ற அடையாளத்தை பெற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட இவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் நடிக்கும் முதல் படத்திலேயே ஹீரோ என்பது மிகப்பெரிய சந்தோஷமான விஷயமாகத்தான் இருக்கிறது. அதாவது இவர் தமிழ் சீரியலில் வருவதற்கு முன் கன்னட சீரியல்கள் நடித்த பின்பு தான் தமிழுக்கு எண்டரி கொடுத்தார்.
அதே மாதிரி முதல் முறையாக இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கனடாவில் தான். அந்த வகையில் கமரோட்டு 2 என்ற கன்னட படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினியாக பிரியங்கா உபேந்திரா கமிட்டாய் இருக்கிறார். இவர் அஜித்துடன் ராஜா என்ற படத்தில் ப்ரியா என்ற கேரக்டரில் நடித்தார். அப்படிப்பட்டவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாக இருக்கிறது. இன்னும் கூடிய விரைவில் இப்படம் வெளிவரப் போகிறது. ஆனால் இதைவிட ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த படம் ஆறு மொழிகளில் வெளியாகப் போகிறது. அதில் தமிழ் மொழியிலும் இவருடைய கமரோட்டு 2 படம் வரப்போகிறது.
இதனுடைய முதல் பாகம் ஏற்கனவே வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சுவாமி நடிக்கப் போகும் இரண்டாம் பாகமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி ஹீரோவாக வருவார் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.