காவிரியை கூட்டிட்டு போக வரும் விஜய்.. சாரதா எடுக்க போகும் முடிவு

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா பிரச்சனைக்கு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்து விட்டது என்பதற்கு ஏற்ப வெண்ணிலாவுக்கு காவேரி மற்றும் விஜயின் காதல் கல்யாணம் நன்றாகவே புரிந்து விட்டது. அதனால் தனக்கு விட்டுக் கொடுத்த விஜய்யை காவேரிக்கு கொடுக்க வேண்டும் என்று வெண்ணிலா முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் காவேரி செய்து கொடுத்த சத்தியத்தை விஜய்யிடம் சொல்லிவிடுகிறார். உடனே விஜய் மற்றும் வெண்ணிலா இருவரும் சேர்ந்து கொடைக்கானலுக்கு போக இருந்த காவிரியை சந்தித்து பேசுகிறார்கள். அப்பொழுது வெண்ணிலா, நீயும் விஜய்யும் சந்தோசம் இல்லாமல் தனியாக இருப்பதாகவும், விஜய் வாழ்க்கையில் பிரச்சனை கொடுக்கும் விதமாக இருப்பதாகவும் ராகினியும் பசுபதியும் சொல்லி என்னை நம்ப வைத்து விட்டார்கள்.

ஆனால் நீ எப்பொழுது கர்ப்பம் என்று சொன்னியோ அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது. நீங்கள் ரெண்டு பேரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக இருந்திருக்கிறீர்கள் என்று. அதனால் இனிமேலும் உங்கள் வாழ்க்கையில் நான் தலையிட கூடாது என்று முடிவு பண்ணி விட்டேன். எப்பொழுதுமே விஜய்க்கு காவேரி தான் என்று சொல்லி இருவரையும் சேர்த்து வைத்துவிட்டு மாமாவுடன் வெண்ணிலா கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக விஜய், காவேரியிடம் இன்றைக்கு நீ உங்க வீட்டுக்கு போ. நாளைக்கு நான் வந்து உங்க அம்மாவிடம் பேசி உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த காவிரி அம்மாவையும் பாட்டியையும் ஐஸ் வைத்து பேசிவிட்டு விஜய் எப்படியும் கூப்பிட வந்து விடுவார், அம்மா சமாதானம் ஆகிவிடும்.

இல்லை என்றால் நம்மளே களத்தில் இறங்கி விஜய் கூட போயிட வேண்டியது தான். போதும் இதுவரை விஜய் என்னால் கஷ்டப்பட்டது, இனி நான் விஜய் கூட தான் இருக்க வேண்டும் என்று காவிரியும் முடிவு பண்ணி விட்டார். இருந்தாலும் விஜய் நாளைக்கு எப்படி கூப்பிட வருவார் என்று யோசித்துப் பார்க்கிறார் காவேரி. அந்த வகையில் விஜய் சொன்னபடி சாரதாவை சமாதானப்படுத்தி காவிரியை கூட்டிட்டு போக வரும் விஜய்க்கு சாரதா கொடுக்கும் பதில் என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.