Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஜய் எப்படியாவது வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று காவேரி குமரன் முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் குமரன், வெண்ணிலாவின் மாமா ஊருக்கு சென்று எப்படியாவது வெண்ணிலாவின் மாமாவை சந்தித்து பேசி நடந்து உண்மையை போலீஸிடம் சொல்ல வைக்க வேண்டும் என்று போயிருக்கிறார்.
காவேரி ஹாஸ்பிடலில் இருக்கும் வெண்ணிலாவை சந்தித்து பசுபதி தான் மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டார். என்னுடைய விபத்துக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உண்மையை சொல்ல வைக்க வேண்டும் என்று வெண்ணிலாவை பார்த்து பேசுகிறார். ஆனால் அப்படி பேசும் பொழுது வெண்ணிலா, நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விஜயை எனக்கு விட்டுக் கொடுப்பியா என்று கேட்கிறார்.
உடனே காவிரி, விஜய் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் வெண்ணிலாவிடம் காலில் விழுந்து கெஞ்சுகிறார். பிறகு வெண்ணிலா உண்மை சொல்ல தயங்கி நிலையில் நான் உனக்கு சத்தியம் பண்ணுகிறேன் நிச்சயம் விஜய் விட்டு நான் போய் விடுகிறேன் என்று சொல்கிறார்.
ஆனாலும் நம்பிக்கை இல்லாத வெண்ணிலாவுக்கு இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக வெண்ணிலா கையை காவேரி அவருடைய வயிற்றில் வைத்து என் குழந்தை மீது சத்தியமாக சொல்கிறேன் விஜய் விட்டு நான் போகிறேன் என்று. அப்போதுதான் வெண்ணிலாவுக்கு அதிர்ச்சியாக தெரிகிறது காவேரியும் விஜய்யும் சந்தோசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று.
அதனால் இவர்களுடைய வாழ்க்கையில் நாம் தலையிட வேண்டாம் என்று முடிவு பண்ணி பெட்டி படுக்கையை எடுத்துட்டு போக தயாரான காவிரிக்கு பதிலாக விஜய்யுடன் காவிரியை சேர்த்து வைத்துவிட்டு வெண்ணிலா பெட்டி படுக்கையை எடுத்துவிட்டு மாமாவுடன் ஊருக்கே போகப் போகிறார். அந்த வகையில் வெண்ணிலா பிரச்சினையும் முடிந்துவிடும், வெண்ணிலவை தள்ளிவிட்ட குற்றத்திற்காக பசுபதியும் ஜெயிலுக்கு போய்விடுவார்.
இதனால் காவேரி மற்றும் விஜய்க்கு விடிவு காலம் பிறந்து விட்டது போல் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள். இதனுடன் காவிரி கர்ப்பமான விஷயத்தையும் சாரதா தெரிந்து கொண்டு விஜய் உடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சந்தோசமாக வாழ வைக்க போகிறார்கள்.