மகாநதி சீரியலில் நவீனிடம் சமாதானமாகி நட்பான விஜய்.. வெண்ணிலாவிடம் தில்லாக சவால் விடும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரி இருவரும் தனியாக இருந்து பேசி ஒருவரை ஒருவர் அன்பை பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது காவேரி வீட்டுக்கு வந்து விடுகிறார். ஆனாலும் வீட்டுக்குள் தனியாக போக இஷ்டம் இல்லாத காவி,ரி விஜய் நினைத்து பீல் பண்ணுகிறார். விஜயும் காவிரிக்கு டாட்டா சொல்லிய நிலையில் காவிரி தன்னுடன் இல்லை என்பதால் அழ ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு விஜய் நவீனை சந்தித்து பேசுவதற்காக நவீன் வீட்டிற்கு போய்விடுகிறார். அங்கே போனதும் நவீனிடம் விஜய் மன்னிப்பு கேட்கிறார். நவீன் காவிரி உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்களா என்ன கேட்கிறார். ஆமாம் எல்லாம் எனக்கு தெரியும் ஹாஸ்பிடல் போயிட்டு காவிரியை பார்த்து பேசிட்டு தான் வருகிறேன் என்று நவீன் இடம் சொல்லி நன்றி சொல்கிறார்.

உடனே நவீன் நீங்களும் காவேரியும் தற்போது பிரிந்து இருப்பதற்கு நானும் ஒரு காரணம். அதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பா ஆனதற்கு வாழ்த்து சொல்கிறார். அதற்கு விஜய்யும் சிரித்த முகத்துடன் நவீன் இடம் இருந்த கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு நட்பு ரீதியாக சமாதானம் ஆகிவிட்டார்.

அந்த வகையில் இவர்களுடைய நட்பை பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. அடுத்ததாக காவிரி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் போன் பண்ணி கூப்பிடுகிறார். உடனே காவிரியும் யாருக்கும் தெரியாமல் விஜய்யை பார்த்து பேசுகிறார். தற்போது எல்லா பிரச்சினையும் முடிந்து விட்ட நிலையில் சாரதாவையும் வெண்ணிலாவை மட்டும் இன்னும் சமாளிக்கும் படியான சூழ்நிலை இருக்கிறது.

அந்த வகையில் வெண்ணிலா, காவிரியை பார்த்து பேச வரும் பொழுது கொஞ்சம் திமிராக பேசி எனக்கும் விஜய்க்கும் நாளைக்கு கோவிலில் கல்யாணம் நடக்கப்போகிறது என்பதை சொல்கிறார். அதற்கு காவேரி தில்லாக முடிஞ்சா அத பண்ணி பாரு என்று விஜய் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்லி விடுகிறார். அடுத்து கோவிலில் பசுபதி ஏற்பாடு பண்ணும் திருட்டு கல்யாணத்தில் விஜய் இடம் பசுபதி மற்றும் அஜய் அப்பா அடி வாங்க போகிறார்.

அத்துடன் போலீஸ் அங்கு வந்த நிலையில் காவிரியின் குடும்பம் இறப்பதற்கு விஜய் தான் காரணம் என்று சொல்லி விஜய்யை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகும் அளவிற்கு மிகப்பெரிய ரகளை காத்துக் கொண்டிருக்கிறது.