மகாநதி சீரியலில் காவேரி பட்ட கஷ்டத்திற்கு மருந்து போடும் விஜய்.. முடிஞ்சு போன வெண்ணிலாவின் கதை

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஆரம்பத்தில் ஒப்பந்தத்தின் படி விஜய் மற்றும் காவிரி கல்யாணம் பண்ணி இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து வாழும் பொழுது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனதார ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் அவருடைய காதலை வெளிப்படுத்தாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக இணைந்ததன் விளைவாக காவேரி கர்ப்பமாகிவிட்டார்.

காவிரி கர்ப்பம் என்று தெரிந்தாலும் உண்மையை யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை என்பதால் காவேரி எல்லோரிடமும் மறைத்து விட்டார். பிறகு காவேரி கர்ப்பம் என்று விஷயத்தை டாக்டர் மூலம் விஜய் தெரிந்து கொண்டதால் இதுவரை காவிரிபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் மருந்து போடும் விதமாக காவிரியை தனியாக கூட்டிட்டு பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார்.

இவர்களை யாரும் தொந்தரவு பண்ணாத படி தனிமையில் காவிரி மற்றும் விஜய் இருக்கிறார்கள். அத்துடன் காவிரிக்கு என்ன வேணும், என்ன செய்யணும் என்பதை பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக விஜய் செய்து கொண்டு வருகிறார். காவிரியிடம் இப்படியே என்னுடன் வந்துவிடு என்று விஜய் கூப்பிடுகிறார். ஆனால் காவேரி குடும்ப சூழ்நிலை கொஞ்சம் மாறிய பிறகு நான் வருகிறேன் என்று விஜயை சமாதானப்படுத்தி விட்டார்.

அந்த வகையில் இவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை யாராலையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் வகையில் இருவரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இவர்களை பிரிக்க வேண்டும் என்று பசுபதி ராகினி அஜய் 3 பேரும் சேர்ந்து வெண்ணிலா மற்றும் வெண்ணிலவின் மாமாவிடம் பிளான் பண்ணுகிறார்கள். அந்த பிளான் படி வெண்ணிலாவிற்கும் விஜய்க்கும் திருட்டு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று கோவிலில் ஏற்பாடுகள் நடைபெறப் போகிறது.

ஆனால் சும்மாவே விஜய் எல்லாத்தையும் வச்சு சம்பவம் செய்வார், இப்போது காவிரி கர்ப்பம் தெரிந்த பிறகு இவர்களை சும்மா விட மாட்டார். வெண்ணிலா பிரச்சனைக்கும் பசுபதியின் ஆட்டத்திற்கும் முடிவு கட்டும் விதமாக விஜய் தரமான சம்பவம் செய்யப் போகிறார். இதன் பிறகு விஜய் மற்றும் காவிரி வாழ்க்கைக்குள் வெண்ணிலா வராதபடி வெண்ணிலாவின் கேரக்டர் முடிந்து விடும்.