திரைத் துறையில் பிரபலமாக இருக்கும் நபர்கள் என்ன செய்தாலும் அது வெளியில் தெரிந்துவிடும். அப்படித்தான் தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கும் தளபதி விஜய் செய்த காரியத்தை, அப்படியே விஜய்டிவி பிரபலங்களும் பின்பற்றி அவருடைய ரசிகர்களிடம் பேசும் பொருளாக மாறி உள்ளனர்.
விஜய் சமீபத்தில் 65 கோடிக்கு ஒரு பிளாட்டை துபாயில் புக் செய்திருக்கிறார். அவர் துபாயில் மட்டுமல்ல சென்னையிலும் ஒரு அப்பார்ட்மெண்ட்டை கோடிக்கணக்கான முதலீட்டில் புக் செய்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படத்திற்காக அவர் 100 கோடி சம்பளம் வாங்கினார்.
என்னதான் பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் விஜய்யின் அடுத்த படமான வாரிசு படத்திற்கு அவர் மேலும் 20 கோடி அதிகமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறார். இப்படி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய்க்கு துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் அப்பார்ட்மெண்ட் வாங்குவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.
ஆனால் விஜய் தற்போது வாங்கி இருக்கும் சென்னை அப்பார்ட்மெண்ட்டை ஆபீஸ் ஆக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இதை அறிந்த விஜய் டிவி மக்கள் பலபேர், அதே பில்டரிடம் பிளாட் வந்திருக்கின்றனர். அவர்களது வரிசையில் தற்போது விஜே பிரியங்கா, ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா போன்ற விஜய் டிவி பிரபலங்கள் விஜய் பிளாட் வாங்கிய அதே பில்டரிடம் அவர்களும் சொந்தமாக பிளாட் வாங்கி உள்ளனர்.
இப்படி விஜயை போல செய்து விஜய்டிவி பிரபலங்களும் வளர்ந்து வருகின்றனர். அதிலும் அறந்தாங்கி நிஷா, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தற்போது வெள்ளித்திரையிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில், குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றது வளர்ந்து வரும் விஜய் டிவி பிரபலமாக மாறியிருக்கிறார்.
கையில காசு இருந்தால் யாரோட வேண்ணாலும் போட்டி போடலாம் அல்லவா! அப்படிதான் தற்போது விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்கள் ஆக இருக்கும் இவர்கள் மூவரும் நீங்க அப்படி செஞ்சா, நாங்க இப்படி செய்வோம்! என்று விஜய்க்கு போட்டியாக அவர் செய்வதை தாங்களும் செய்து திரையுலகில் கெத்து காட்ட நினைக்கின்றனர்.