விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா. இவருடைய தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதைதொடர்ந்து விஜய் டிவியிலேயே நிறைய நிகழ்ச்சிகளில் தீனா பங்கு பெற்றார்.
மேலும் விஜய் டிவியில் உள்ள பிரபலங்களிடம் போன் காலில் பிராங்க் செய்து பேசுவார். டிடியுடன் இணைந்து சில நிகழ்ச்சிகளையும் தீனா தொகுத்து வழங்கி உள்ளார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் திறமையை காட்டி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியான இன்று சைலன்டாக தனது திருமணத்தை தீனா முடித்துள்ளார். அதாவது பிரகதி என்பவரை மனம் முடித்துள்ளார் தீனா. பிரகதி கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வருகிறாராம். மேலும் இவர்களது திருமணம் உறவினர்கள் சூழ இன்று பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.
கலக்கப்போவது யாரு தீனா

மேலும் வருகின்ற 10ஆம் தேதி இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனராம். கலக்கப்போவது யாரு சரத் தீனாவின் கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
பிரகதி என்பவரை மனம் முடித்துள்ளார் தீனா

தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தீனாவின் திருமண புகைப்படத்தை பார்த்து சீக்ரட்டாக கல்யாணத்தை முடித்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தீனா திருமண விழாவில் கலந்து கொண்ட சரத்

சீக்ரெட் ஆக திருமணத்தை முடித்த விஜய் டிவி தீனா
