நம்பர் ஒன் நிகழ்ச்சியில் புகழை ஜட்ஜ் ஆக போட்ட விஜய் டிவி.. மொத்தத்தையும் டேமேஜ் பண்ணிய டம்மி பீஸ்கள்

Vijay Tv: விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் நம் மனதிற்குள் எப்போதும் நீங்காத இடத்தை பிடித்திருப்பது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் எத்தனையோ கலைஞர்கள் பிரபலமாகி அவர்களுடைய திறமைகளை வளர்த்து தற்போது எட்டாத தூரத்தை அடைந்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு கலக்கப்போவது நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து விஜய் டிவி சேனலை தூக்கி நிறுத்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீசன் 10 ஆவது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முடிவுக்கு வரும் வரை பெருசாக மக்களிடம் ரீச் அடையவில்லை.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக பேசப்படுகிறது ஜட்ஜ் ஆக வந்தவர்கள் தான். அதாவது பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர்கள் மிகப்பெரிய பிரபலமாகவும் அவர்கள் அந்த விஷயத்தில் நல்ல இடத்தை அடைந்து அவர்களுக்கான தனித்துவத்தை மக்களிடம் காட்டிய பிறகு தான் நடுவராக வந்திருப்பார்கள்.

ஆனால் இந்த முறை கலக்கப்போவது யாரு சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஜட்ஜ் ஆக வந்தவர் புகழ். இவருடன் சேர்ந்து வேற யாரையும் எடுக்காமல் விஜய் டிவிக்குள் இருந்தவர்களையே வைத்து ஜட்ஜ் ஆக போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வந்த புகழுடன் சேர்ந்து அமுதவாணன், ராமர் நிகழ்ச்சியை நடித்திருக்கிறார்கள்.

இதை அறந்தாங்கி நிஷா மற்றும் சீரியலில் கதாநாயகனாக நடித்த வினோத் பாபு தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி வந்த தடமே தெரியாமல் முடிந்து போனதற்கு விஜய் டிவியில் உள்ளே இருப்பவர்களை வைத்து நடத்தியது தான்.

மேலும் வெளியில் இருந்து இந்த ஷோவை நடத்துவதற்கு யாரும் முன் வரவில்லை. காரணம் அவர்கள் கேட்டுக்கொண்டபடி சம்பளத்தை கொடுக்க முடியாதாலும் உள்ளே இருப்பவர்களே வைத்து நடத்தி இருக்கிறார்கள். அதுதான் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடிப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.