பிக் பாஸ் வருவதால் முடிவுக்கு வரும் சீரியல்.. 600 எபிசோடை தாண்டிய ஃபேவரிட் சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, சச்சரவு, விறுவிறுப்பு, அடிதடி, காதல் என அனைத்துமே பார்த்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயமாக இருக்கும். அதனாலேயே 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஒன்பதாவது சீசன் ஆரம்பிப்பதற்கு தயாராக இருக்கிறது. அந்த வகையில் இந்த முறையும் இந்த சீசனை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

எப்பொழுதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிறது என்றால் அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதற்காக சீரியலில் நேரத்தை மாற்றுவதும் சில சீரியல்களை அவசரமாக முடிப்பதும் வழக்கமாக விஜய் டிவி செய்து வருகிறது. அதனால் இந்த முறையும் 600 எபிசோடு முடித்த மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருக்கும் ஒரு சீரியலை முடிக்க போகிறார்கள்.

அதாவது 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஆகா கல்யாணம் சீரியல் ஒரு சில காரணங்களுக்காக 6 மணிக்கு மாற்றினார்கள். எப்பொழுது 6:00 மணிக்கு மாற்றினார்களோ அப்பொழுதே அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் கம்மியாகிவிட்டது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக எந்த ஒரு சீரியலை முடிக்கலாம் என்று பார்த்த பொழுது இந்த சீரியல் கொஞ்சம் டல் அடிப்பதால் இதை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

அந்த வகையில் ஆறு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடியப்போகிறது. விஜய்க்கும் அனாமிகாக்கும் விவாகரத்து கிடைத்த நிலையில் விஜய் பிரபாவுடன் சேரப் போகிறார். இதனை தொடர்ந்து சீரியலை முடிக்கப் போவதால் அவசரமாக கதைகளைக் கொண்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.