ஒரு வழியா 2 சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி.. போட்டி போட்டு வரும் புது சீரியல்

Vijay Tv: என்னதான் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்தாலும் சின்னதிரை மூலம் வரும் சீரியலுக்கு தான் இல்லத்தரசிகள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் புதுசு புதுசாக சீரியலை கொண்டு வந்து நான் நீ என போட்டி போட்டு மோதுகிறார்கள்.

இதில் எந்த சீரியல் எல்லாம் நல்லா ஓடவில்லையோ அதை எல்லாம் தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதுசாக ஒரு சீரியலை கொண்டு வருவது வழக்கம். அப்படி விஜய் டிவியில் பல மாதங்களாக சுமாராக ஓடிக் கொண்டிருந்த இரண்டு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.

அந்த வகையில் கிரின்ச் சீரியல் என்று சொல்லக்கூடிய பொன்னி என்ற சீரியல் கிளைமாக்ஸை தொட்டுவிட்டது. இதுவரை சக்தியை வெறுத்து வந்த பொன்னி முடிய போகும் தருவாயில் இருப்பதால் சக்தியை புரிந்து கொண்டு காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்து விட்டார்.

அதனால் இன்னும் ஒரு சில நாட்களில் பொன்னி சீரியல் முடிந்துவிடும். இதற்குப் பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் வரப்போகிறது. அடுத்ததாக சக்திவேல் என்ற சீரியலும் முடியப்போகிறது. இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் போய் சேரவில்லை.

அதனால் இதற்கு பதிலாக வேறு ஒரு புது சீரியலை கொண்டு வரப் போகிறார்கள். சன் டிவி ஏதாவது பழைய சீரியல் முடித்துவிட்டு புது சீரியலை கொண்டு வந்தால் உடனே விஜய் டிவியும் அதே ட்ரிக்சை பாலோ பண்ணுவார்கள். இப்படித்தான் இரண்டு சேனல்களும் போட்டி போட்டு மோதுகிறார்கள்.