மட சாம்பிராணியாக இருக்கும் தனம்.. அனுதாபத்தை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை ஏத்தும் விஜய் டிவி

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதி கட்டத்தை நோக்கி வருவதால் கடைசியில் செண்டிமெண்ட் சீனை வைத்து முடித்து விடலாம் என்று தனத்தை வைத்து உருட்டி வருகிறார்கள். இது என்னடா பெரிய அக்கப்போராக இருக்கு என்று சொல்வதற்கு ஏற்ப தனம் கேன்சரில் தவிக்கிறார்.

ஆனால் இந்த உண்மை தெரிந்தும் வீட்டில் யாருக்கும் தெரியாத படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனம், மீனாவிடம் சொல்ல அவரும் இந்த ஒரு வாரத்திற்குள் நீங்கள் நினைத்தபடி எல்லாத்தையும் செய்து முடித்து விடுங்கள். அதன் பிறகு வீட்டில் அனைவரிடம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து தனம் அவருடைய கடமை அனைத்தையும் முடித்து விட வேண்டும் என்று ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்து விட்டார். அதில் ஐஸ்வர்யாவின் வளைகாப்பை கண்கொள்ளாக நடத்தி பார்க்க வேண்டும் என்று செய்கிறார். இதன் பிறகாவது வீட்டில் சொல்லி விடுவார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் தனம் சொல்வது மாதிரி தெரியவில்லை. அடுத்ததாக மீனா, தனத்திடம் நீங்கள் நினைத்தபடி வளைகாப்பு நல்லபடியாக முடிந்து விட்டது. இப்பொழுது அனைவரிடமும் நாம் சொல்லலாம் என்று சொல்கிறார். அதற்கு தனம் அங்க போய் பாரு எல்லாரும் எவ்வளவு சந்தோசமா பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க கஷ்டப்படுகிற மாதிரி இப்பொழுது இதை சொன்னா நல்லா இருக்காது. அதனால் சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார்.

அதற்கு மீனா அவங்க கிட்ட சொல்லாம எப்படிக்கா ஆபரேஷன் பண்ண முடியும். அதுவும் ஆப்ரேஷன் பண்ணுவதற்கு முன் சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்டும். அது அவர்களுக்கு தெரியாமல் பண்ண முடியாது தானே. அதனால் இப்பொழுது சொன்னால் தான் எல்லாம் கரெக்டாக இருக்கும் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து மீனா வெளியே வந்து குடும்பத்தின் அனைவரிடமும் சொல்ல வருகிறார்.

அப்பொழுது அவர்கள் ஒன்றாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துட்டு மீனா அப்படியே நின்று விடுகிறார். உடனே தனம் இப்ப போய் நீ சொல்லி இவங்க சந்தோஷத்தை கெடுக்க போறியா என்று கேட்கிறார். ஆக மொத்தத்துல பெரிய தியாகி மாதிரி தனம் இருக்கப் போகிறார். இந்த விஜய் டிவி டிஆர்பி ரேட்டு கூட்டுவதற்கும், ட்ரெண்டிங்கில் வருவதற்காக அனுதாபத்தை வைத்து நாடகத்தை உருட்டிட்டு வருகிறது.