விஜய் டிவி டிஆர்பிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது பலரது கருத்தாக உள்ளது. அதை பலமுறை விஜய் டிவியே நிரூபித்துள்ளது. ஏனென்றால் பிக்பாஸில் டிஆர்பிக்காக வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் விதிகளை மீறி அடிக்கடி வீட்டுக்குள் அனுப்பியது. இதைத்தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை வனிதாவுக்கு வழங்கியது.
இதைத்தொடர்ந்த வனிதாவின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய பிரச்சனையில் ரவீந்தர் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் இணையத்தில் ட்ரெண்டான உடன் கடந்த தீபாவளி நிகழ்ச்சியில் அவர்களை டிஆர்பிக்காக பங்கேற்க வைத்தனர்.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள விஷயம் நயன்தாராவின் வாடகை தாய் சர்ச்சை தான். திருமணமான நான்கே மாதங்களில் இரண்டு ஆண் குழந்தைகளை நயன்தாரா வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார். இது இணையத்தில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமின்றி தற்போது சமந்தாவின் யசோதா படமும் வாடகைத்தாய் பிரச்சனையை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான நீயா நானா பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள் அதுமாக நீயா நானாவின் இந்த வாரம் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரம் வாடகைத்தாய் பிரச்சனையை முன்னெடுத்து உள்ளார்கள். இதற்கு ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கலாம், டெக்னாலஜி என்று ஒன்றை வைத்துக்கொண்டு தவறான முன்னுதாரணத்தை ட்ரெண்டிங் செய்வதாக மக்கள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். இதில் பேசும் அனைத்து வாசகங்களுமே சூசகமாக நயன்தாராவை தான் தாக்குவதாக உள்ளது. எப்போதுமே இது போன்ற வேலையை தான் தொடர்ச்சியாக விஜய் டிவி செய்து வருவதாக பலரும் குற்றம் சாட்டு உள்ளனர்.