மூணு சீரியலுக்கு ஒரே கதை கேவலமாக உருட்டும் விஜய் டிவி.. கதறவிடும் இயக்குனர்கள்

முன்பு டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களை பிடித்துக் கொண்டிருந்த விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் இப்போது ரேட்டிங் கிடைக்காமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் ஒரே சீரியலில் இருக்கும் கதையை அப்படியே மற்ற சீரியல்களிலும் அட்டகாப்பியடிக்கின்றனர். அதுக்குன்னு இப்படியா அப்பட்டமாக உருட்டுவது என்று விஜய் டிவியை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதற்காக தன்னுடைய கணவர் கண்ணனுடன் சேர்ந்து நடனம் ஆடும் போது தடுக்கி விழுந்து விடுகிறார். கர்ப்பிணியான ஐஸ்வர்யா கீழே விழுந்ததும் கண்ணன் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற கதைக்களம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரத் தொடக்கத்தில் ஒளிபரப்பானது.

ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இரண்டாவது மருமகள் வசு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் மாடிப்படியில் இருந்து தவறி விழுகிறார். அதன் பிறகு அவருக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இதை எப்படியோ மூத்த மருமகள் தமிழ் தெரிந்துகொண்டு வீட்டிற்கு வந்து, அவரை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கிறார்.

கர்ப்பிணி வசு தடுக்கி விழுந்த சீன்

இந்த காட்சியை ரசிகர்கள் விரும்பி பார்த்ததால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு விஜய் டிவி அடுத்த வாரத்திலும் இருக்கிற மற்ற சீரியல்களில் அது போன்ற காட்சியை அமைத்திருப்பது படு கேவலமாக சீரியலை உருட்டுவது அப்பட்டமாக தெரிகிறது. ஏனென்றால் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இடம் பெற்ற அதே காட்சி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் அதன் தொடர்ச்சியாக இப்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் காண்பித்திருக்கின்றனர்.

கர்ப்பிணி ஐஸ்வர்யா தடுக்க விழுந்த சீன்

பாக்கியலட்சுமியின் மூத்த மருமகளான ஜெனி கர்ப்பிணி ஆக இருக்கிறார். அவர் மாடி படியில் இருந்து கீழே இறங்கும் போது கால் தவறி வழுக்கி விழுகிறார். வலி தாங்க முடியாத ஜெனியை பார்த்த ராதிகா அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இவ்வாறு விஜய் டிவி மூன்று சீரியல்களிலும் ஒரே சீனை காண்பித்து கேவலமாக உருட்டுவதை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் காட்டமாக விமர்சிக்கின்றனர்.

கர்ப்பிணி ஜெனி தடுக்கி விழுந்த சீன்

முன்பு திரைப்படங்களில் இருக்கும் காட்சிகளை அப்படியே அட்ட காப்பி அடித்துக் கொண்டிருந்த விஜய் டிவி, இப்போது ஒரே சீனையே ஒட்டு மொத்த சீரியல்களிலும் மாறி மாறி காண்பித்து கதற விடுகின்றனர். இதற்கு பேசாமல் சீரியல்களை எல்லாம் ஊத்தி மூடி விட்டு வேறு ஏதாவது என்டர்டைன்மென்ட் ஷோவை ஒளிபரப்பு செய்யலாம். அதற்கு தான் நீங்கள் லாயக்கு என்று நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்க்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →