திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது. கிட்டதட்ட ஐந்து சீசன்களை தொடர்ந்து இப்போது 6வது சீசனும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கொண்ட தொடங்கப்படும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் ஓட்டின் அடிப்படையில் ஒருவர் வெளியேறுவார்.

இந்த நடைமுறைதான் கடந்த 6 சீசன்களாக நடந்து வருகிறது. இதெல்லாம் வெளியில் ரசிகர்களின் கண் தொடைப்புக்கு தான். பிக் பாஸ் உள் பெரிய சூழ்ச்சியை நடந்து வருகிறது. விஜய் டிவிக்கு எப்போதுமே டிஆர்பி தான் முக்கியம். ஆகையால் அதற்கு ஏற்றபடி தான் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களை வெளியேறுகிறார்கள்.

அதற்கு இந்த வாரமே ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு தான். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் தனலட்சுமி வெளியேறுகிறார். மிகவும் சுறுசுறுப்பாகவும், எல்லா டாஸ்கிலும் ஈடுபாடுடன் விளையாடும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. இவரை விட மைனா நந்தினி மற்றும் ரக்ஷிதா ஆகியோருக்கு ஆதரவு குறைவு தான்.

ஆனால் தனலட்சுமியை வெளியேற்றுவதற்கான காரணம் இருக்கிறது. அதாவது இதுவரை தனலட்சுமி கொடுக்க வேண்டிய கன்டென்ட் எல்லாமே கொடுத்து விட்டார். அடுத்த வாரம் சொந்த பந்தங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர உள்ளனர். தனலட்சுமி ஏற்கனவே தனது அம்மா பற்றி இந்த நிகழ்ச்சியில் நிறைய பேசி விட்டார்.

அதுமட்டுமின்றி தனலட்சுமி அம்மாவும் நிறைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டார். இதனால் இவர்களால் டிஆர்பிக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் ரக்ஷிதா, அமுதவாணன், அசீம், சிவின் போன்றோர்களின் உறவினர்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இவர்களால் கண்டிப்பாக அடுத்த வாரம் டிஆர்பி அதிகம் வர வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளரை விட்டு விட்டு தனலட்சுமி பிக் பாஸ் வெளியேற்றியுள்ளனர். இது இந்த சீசனில் மட்டுமல்ல எல்லா சீசனிலும் இப்படி தான் நடந்து வருகிறது. ஆகையால் ரசிகர்கள் போடும் வாக்குகள் அனைத்துமே வேஸ்ட் தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →