காட்டுன கவர்ச்சிக்கு குவியும் பட வாய்ப்பு.. கதாநாயகியாக உருவெடுக்கும் விஜய் டிவி குடும்ப குத்து விளக்கு

Vijay TV Serial Actress: ஜாக்பாட் அடித்தது போல் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகைக்கு இப்போது சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் எல்லாம் சீரியலில் கதாநாயகியாக நடித்த பின்பு தான் சினிமாவில் ஹீரோயின் ஆக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றனர்.

அந்த வரிசையில் இப்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மருமகளுக்கு ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்படும் கேரக்டர் தான் முல்லை கதாபாத்திரம்.

இதில் முதலில் VJ சித்ரா நடித்தார். அதன் பின் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருக்கு பதில் அந்த முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி கனகச்சிதமாக பொருந்தி நடித்தார். அதன் பின்பு காவியாவிற்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வரவும் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இவர் முதல் முதலாக கடந்த வருடம் வெளியான மிரள் என்ற படத்தில் நடித்தார். இதில் இவருடன் பரத், வாணி போஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சின்னத்திரையில் குட்டி நயன்தாராவாக ரசிகர்களால் அழைக்கப்பட்ட காவியா, இப்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இந்த படத்தின் முழு விவரமும் இனிவரும் நாட்களில் வெளியாகும். இருப்பினும் காவியா அறிவுமணியின் இந்த வளர்ச்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. இவருடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்து இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகையாக ரவுண்டு கட்ட வேண்டும் என அவருடைய ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அதே சமயம் இவர் சமூக வலைதளங்களில் காட்டிய கவர்ச்சி வீணா போகல, கை மேல் பலனாய் தொடர்ந்து காவியாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறது. மேலும் இந்த புதிய படத்தில் காவியா அறிவுமணிக்கு கதாநாயகனாக யார் நடிக்கப் போகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.