Vijay Tv Serial: நேற்று விஜய் டிவியில் இருந்து தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலின் ப்ரோமோவை பார்க்கும் பொழுது ஏற்கனவே வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன் கதை போல் இருக்கிறது.
அதை தான் பார்ட் 2வாக எடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் என்ன இதில் வெற்றி என்கிற வினோத் பாபு வந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக புதுசாக ஹீரோ ஹீரோயின்களை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தக் கதையும் கிட்டத்தட்ட துணிச்சலுடன் இருக்கும் ஹீரோயின், ரவுடியாக சுற்றும் ஹீரோ இவர்களை சுற்றி தான் கதை நகரம் போகிறது. இந்த சீரியலின் ஷூட்டிங் எல்லாம் ஆரம்பம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அடுத்த மாதத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.
ஆனால் இந்த சீரியலுக்கு பதிலாக இன்னொரு சீரியலை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். அந்த சீரியல் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக விஜய் டிவியில் ஒரு கிரின்ச் சீரியல் என்று பெயர் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சீரியல் எது என்றால் சமீபத்தில் முத்து என்கிற வெற்றியை கல்யாணம் பண்ணிக்கொண்ட வைஷ்ணவி நடிக்கும் பொன்னி சீரியல் தான்.
பொன்னி சீரியல் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக ஓடினாலும் பெருசாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெறவில்லை, அத்துடன் எதிர்பார்த்த வரவேற்புகளும் கிடைக்காததால் அந்த சீரியலை முடிக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். இந்த சீரியலின் கதைகள் தற்போது முடிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மே மாதம் கடைசி வரை இழுத்துக் கொண்டு ஜூன் மாதத்தில் இருந்து புத்தம் புது சீரியலாக தென்றலே மெல்ல பேசு சீரியல் வரப்போகிறது. ஆனால் பல வருஷங்களாக கதையை இல்லாமல் இழுத்து அடிக்கும் பாக்கிய சீரியல் மட்டும் தப்பித்துக் கொண்டே வருகிறது.
இதில் பாவமாக நிற்பது முத்துதான், இப்பதான் கல்யாணம் ஆனது. அந்த கையோடு மனைவி கதாநாயகியாக நடித்து வரும் சீரியல் முடியப்போகிறது என்றால் இருவருக்குமே மிக அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனாலும் விஜய் டிவி அப்படியே விடாது நிச்சயம் பொன்னி என்கிற வைஷ்ணவிக்கு வேற ஒரு சான்ஸ் கொடுத்து கூட்டிட்டு வருவார்கள்.